உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
இதனைக் கருத்தில் கொண்டே இந்தப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்..
இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கும் 9 இடங்களும் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்துவதற்கு தீவிரமாக ஆதரித்து வந்த அமைப்புகள் இருந்ததாக உளவுத்துறை தகவல் அளித்தது.
அதன் அடிப்படையிலேயே இந்த அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகள், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் நிறுவனத்திடமிருந்து ரகசிய உதவியைப் பெற்று வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆதரவில் தேவையான நிதி, தளவாடங்கள், ராணுவ உதவி, போர்ப் பயிற்சி ஆகியவற்றைப் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.எந்தெந்த இடங்கள், அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவரங்கள்!
• மர்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா (லஷ்கர் இ தொய்பா)
• மர்கஸ் அப்பாஸ், கோட்லி (ஜெய்ஸ் இ முகமது)
•மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி (ஹிஸ்புல் முஜாஹிதீன்)
• ஷவாய் நல்லா முகாம், முசாபராபாத் (லஷ்கர் இ தொய்பா)
• சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் (ஜெய்ஸ் இ முகமது)மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது)மார்கஸ் தைபா, முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா)
• சர்ஜால், தெஹ்ரா கலான் (ஜெய்ஸ் இ முகமது)
• மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன்)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!