உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
கைதுசெய்யப்பட்ட ரேஷ்மா
இதுபற்றி ஆரியநாடு போலீஸார் கூறுகையில், "ரேஷ்மா இரண்டு மொபைல் எண்கள் வைத்துள்ளார். அதில் ஒரு எண்ணை மேட்ரிமோனி-யில் பதிவு செய்துள்ளார்.
அந்த எண்ணுக்கு தொடர்புகொள்ளும் ஆண்களிடம் பெண்ணின் தாய் போன்று பேசி, இளைஞர்களின் பின்னணியை தெரிந்துகொள்வார். ஏமாற்றுவதற்கு ஏதுவான ஆள்தான் என்பதை உறுதி செய்துகொண்டு ரேஷ்மாவின் எண்ணை தருகிறேன் எனக்கூறி மற்றொரு எண்ணை கொடுப்பார்.
மற்றொரு எண்ணில் இளைஞர்களிடம் பேசுவதுடன், தனது வீட்டில் திருமணம் செய்து வைக்கமாட்டார்கள் எனது போன்ற கதைகளைக்கூறி தனி ஆளாகச் சென்று திருமணம் செய்துகொள்வார்.
திருமணத்தின்போது மணமகன் அணிவிக்கும் தாலிச்செயின் உள்ளிட்ட தங்க நகைகளுடன் மாயமாகிவிடுவார். இதுவரை அவர் 10 பேரை திருமணம் செய்துள்ளதாகவும், இன்னும் 4 பேருடன் திருமண நிச்சயம் செய்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரு ஆண்டுக்கு யாரை எல்லாம் திருமணம் செய்யப்போகிறோம் என்ற லிஸ்ட் வைத்து செயல்பட்டுள்ளார்.
அதில் அடுத்த மாதம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளது தெரியவந்தது.
அடுத்த மாதம் திருமணம் செய்ய உள்ள அந்த இளைஞருடன் கோட்டயத்தில் இருந்து ஆரியநாட்டுக்கு வந்துள்ளார். அவரிடம் ஆரியநாட்டில் ஒரு உறவினர் வீட்டுக்கு போவதாக கூறி உள்ளார்.
ரேஷ்மாவை திருமணம் செய்ய தயாரான ஊராட்சி மன்ற உறுப்பினர் திருமணத்துக்காக சுமார் ஏழு லட்சம் ரூபாய் செலவு செய்ததாக புகாரில் கூறி உள்ளார்.
ஊராட்சிமன்ற உறுப்பினரை திருமணம் செய்துவிட்டு மறுநாள் தொடுபுழாவுக்கு புத்தகங்கள் வாங்குவதற்காக செல்ல வேண்டும் என கூறியிருக்கிறார்.
இதன்மூலம் திருமணம் ஆன மறுநாளே ஏமாற்றிவிட்டுச் செல்ல திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ரேஷ்மாவுக்கு 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. பலரையும் ஏன் திருமணம் செய்துகொண்டு ஏமாற்றினாய் எனக்கேட்டதற்கு, பணத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்துகொள்ளவில்லை. அன்புக்காகத்தான் திருமணம் செய்துகொண்டேன் என கூறுகிறார் ரேஷ்மா.
ரேஷ்மாவை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினால் முழு விபரங்களும் தெரியவரும்" என்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!