ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
ஒவ்வொரு சீனிலும் சாய் பல்லவியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் ஏகத்துக்கும் ரசித்தனர். மலர் டீச்சரை எப்படி கொண்டாடினார்களோ அதைவிட அதிகமாக இந்து ரெபெக்கா வர்கீஸை கொண்டாடி தீர்த்தார்கள்.
தமிழில் தனக்கு பெரிய பெயரை அமரன் பெற்றுக்கொடுத்ததால் சாய் பல்லவியும் ஹேப்பி மோடில்தான் இருக்கிறார்.
ஹிந்தியில் சாய் பல்லவி: இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் கலக்கிவந்த அவர் இப்போது ஹிந்தியிலும் தடம் பதித்திருக்கிறார்.
அந்தவகையில் அவர் ராமாயணம் என்ற படத்தில் சீதையாக நடிக்கிறார். படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
கண்டிப்பாக இதில் சாய் பல்லவிக்கு இந்திய அளவில் பெயர் கிடைக்கும் என்று அவரது ரசிகர்கள் இப்போதே ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
முக்கியமாக இந்தப் படத்துக்கு பிறகு ஹிந்தியிலேயே அவருக்கு வாய்ப்புகள் குவிய வாய்ப்புகள் இருப்பதாகவும் பலர் கருதிக்கொண்டிருக்கிறார்கள்.
4,000 கோடி ரூபாய் பட்ஜெட்?: இந்நிலையில் ராமாயணம் படத்தின் பட்ஜெட் குறித்து அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பாட்காஸ்ட் ஒன்றில் பேசியிருக்கிறார்.
அந்த பாட்காஸ்ட்டில் அவர், "ராமாயணம் படத்தின் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து மொத்தம் 4,000 கோடி ரூபாய்க்கும் மேல் பட்ஜெட் போகும்.
இதை கேட்டு பலரும் என்னை பைத்தியம் என்று சொன்னார்கள். எந்தவொரு இந்திய படத்தின் பட்ஜெட்டும் இதன் அருகில்கூட இல்லை.
இது ஒரு மகா காவியம். உலகம் முழுக்க இருக்கும் மக்கள் இந்த மகா காவியத்தை பார்க்க வேண்டும்" என்றார்.
ரசிகர்கள் ஆச்சரியம்: இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் அடுத்த வருட தீபாவளிக்கும், இரண்டாவது பாகம் 2027ஆம் ஆண்டு தீபாவளிக்கும் ரிலீஸாகவிருக்கின்றன.
இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஜிம்மர் ஆகியோர் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. 4,000 கோடி பட்ஜெட் படத்தில் சாய் பல்லவி நடிப்பதை தெரிந்த அவரது ரசிகர்கள்; கண்டிப்பாக இனி பல்லவியின் மார்க்கெட் உச்சத்துக்குத்தான் போகப்போகிறது என்று உறுதியோடு கூறுகிறார்கள்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!