இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
இரு பெண்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள், திருமணத்திற்குப் பின் ஷார்ஜாவில் தங்கள் கணவர்களுடன் வசித்து வந்தனர் (சித்தரிப்புப் படம்)
அதுல்யா விவகாரத்தை பொறுத்தவரை அவரது 10 வயது மகள் தனது தாத்தா-பாட்டியுடம் கொல்லம் மாவட்டத்தில் வசிக்கிறார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் தள பொறியாளராக பணியாற்றும் அவரது கணவர் சதீஷ், "நானும் தடயவியல் அறிக்கைக்காக காத்திருக்கிறேன். நாங்கள் 2014-ல் திருமணம் செய்துகொண்டோம். அந்த நேரத்தில் என் மாமனார் ஒரு வீடு கட்டி வருவதாகவும், பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் கூறினார்.
எனக்கு உங்கள் மகள் மட்டும் போதும் என அவரிடம் தெளிவாக கூறினேன், நான் ஒருபோதும் வரதட்சணை கேட்கவில்லை. இப்போது அவர் வெவ்வேறு வீடியோக்களில் எனக்கு எதிராக என்னவேண்டுமானாலும் கூறலாம். ஆனால்அவள் (அதுல்யா) இப்போது இல்லை," என பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
"கடந்த வரும் நவம்பர் மாதத்தில் அவள் இந்தியாவிற்கு சென்று எனது அனுமதியில்லாமல் கருகலைப்பு செய்துகொண்டாள்.
நான் வேலைக்கு காலையில் 5:30 மணிக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு திரும்புவேன். விடுமுறை நாட்களில் கூட அவள் அவளது அறையில்தான் இருப்பாள். அவள் வேலைக்குச் செல்லவேண்டும் என சொன்னாள், அவள் வேலைக்கு செல்லலாம் என நான் கூறினேன்," என சதீஷ் தெரிவித்தார்.
"அவளுக்கு மாலில் ஒரு கடையில் வேலை கிடைத்தது. அவள் வேலைசெய்ய விரும்பிய கடைக்குகூட நாங்கள் சென்றோம்.
அங்கு சில பெண்கள் வெளியே வந்து அவர்களுக்கு சம்பளம் ஏதும் கிடைப்பதில்லை என்பதால் அங்கு வேலை செய்யவேண்டாம் என அவளது மனதை மாற்ற முயற்சித்தனர்.
அடுத்த நாள் எனது மனைவி என்னை தொலைபேசியில் அழைத்து அவள் இங்கேயே பணியாற்ற விரும்புவதாகவும் அப்படி இல்லாவிட்டால் பிரிய விரும்புவதாகவும் கூறினாள். நான் வேலையை எடுத்துக்கொள்ளும்படி தெரிவித்தேன். ஆம், கருகலைப்புக்கு பிறகு அவள் மிகவும் மன உளைச்சலில் இருந்தாள், " எனவும் சதீஷ் தெரிவித்தார்.
சதீஷின் கூற்றுப்படி, அதுல்யா பிப்ரவரி மாதம் தனது மகள் மற்றும் தாயுடன் ஷார்ஜாவுக்கு திரும்பினார்.
"அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். என்னிடம் போட்டோக்களும், வீடியோக்களும் உள்ளன.
அதுல்யாவின் சகோதரி அகிலாவின் திருமணத்திற்காக அவர்களது குடும்பம் வாங்கிய வங்கிக் கடனுக்கான மாதத் தவணையை நான்தான் செலுத்துகிறேன். 2022 நவம்பர் மாதத்தில் நடைபெற்ற அகிலாவின் திருமணத்தில் நான் 40 கிராம் தங்கத்தையும் கொடுத்தேன்," என்கிறார் சதீஷ்.
ஆனால் அதுல்யாவின் தந்தை ராஜசேகரன் கூறிவதோ முற்றிலும் வேறாக இருக்கிறது.
"அங்கு என்ன நடந்தது என்ன என்பது எனக்கு தெரியாது. நான் தடயவியல் அறிக்கை மற்றும் ஷார்ஜா காவல்துறையினர் விசாரணைக்காக காத்திருக்கிறேன். அறிக்கை வரட்டும், அதன்பின்னர் நான் பதிலளிக்கிறேன்," என அவர் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
''உண்மையிலேயே சதீஷ் வங்கிகடனை அடைத்துக்கொண்டிருந்தாரா, அகிலாவின் திருமணத்திற்கு தங்கம் தந்தாரா?" இந்த கேள்விக்கு பதிலளித்த ராஜசேகரன், "வங்கிக்கடனா? அப்படி எதுவும் இல்லை.
பத்து வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தபோது சதீஷ் கேட்ட 320 கிராம் தங்கத்தை கொடுத்தோம். எனது இரண்டாவது மகளுக்கு (அகிலா) கொடுக்கப்பட்ட தங்கம் அதுல்யாவுடையது, அவளாகவே தனது தங்கைக்கு அவள் அதை அளித்தாள்," என தெரிவித்தார்.
"அந்த வீடியோ வெளியான பிறகு, நான் வேலை செய்துகொண்டிருந்த நிறுவனத்தில் எனது வேலை பறிக்கப்பட்டது," என சதீஷ் சொல்கிறார்.
வரதட்சணை என்பது வெறும் சக்காக மாறிவருகிறதா?
சமூக ஆர்வலர்கள் பெண்களின் தற்கொலைகளுக்கு வரதட்சணையை ஒரு முக்கிய காரணமாகக் கருதுகின்றனர் (சித்தரிப்புப் படம்)
வேலைக்கு செல்வதால் பெண்களின் பொருளாதார அந்தஸ்து வலுவாக இருந்தாலும் அவர்களுக்கு சம அந்தஸ்து கிடைப்பதில்லை என்பதுடன் இது வரதட்சணை போன்ற பழக்கவழக்கங்களை முடிவுக்கு கொண்டுவருவதில்லை என சமூக செய்ற்பாட்டாளர் ரெஜிதா கோபாலகிருஷணன், மற்றும் புகழ்பெற்ற மனநல மருத்துவர் சி. ஜெ. ஜான் ஆகியோர் நம்புகிறார்கள்.
"சொத்து சமமாக பகிரப்படவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு, வரதட்சணைக்கு முழுமையாக மறுப்பு தெரிவிக்கப்படும்போதுதன் இந்த சூழ்நிலை மாறும்.
ஆணாதிக்கம் உள்ள சமூகத்தில் இது சாத்தியமில்லை. பெண்கள் தற்கொலைக்கு வரதட்சணை என்பது ஒரு காரணம்தான்,"என மருத்துவர் ஜான் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
"பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருந்தாலும், அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.
பெண்கள் திருமணங்களை விட்டு வெளியேறுவதை சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் உண்மையான பிரச்னை. அதே பந்தத்தில் தொடர பெற்றோரும் அவர்களுக்கு அழுத்தம் தருகின்றனர்," என ரெஜிதா கோபாலகிருஷணன் சொல்கிறார்.
"துன்புறுத்தப்படும் ஒரு பெண்ணுக்கு தன் பிறந்த வீட்டிற்கு திரும்பும் வலிமை படிப்படியாக பலவீனமடைகிறது. பாதிக்கப்பட்ட ஒரு மகள் அல்லது சகோதரியை காப்பாற்றுவதற்கு பதிலாக, திருமணம் என்ற உறவை காப்பாற்றுவதற்கு சமூகம் முன்னுரிமை அளிப்பது துரதிருஷ்டவசமானது," என்றார் மருத்துவர் ஜான்.
"மூத்த மகளின் திருமணத்தில் முறிவு ஏற்பட்டால், இளைய மகளுக்கு நல்ல வரன் கிடைக்காது என்ற கருத்து சமூகத்தில் நிலவுகிறது.
இதுபோன்ற சமூக அழுத்தத்தின் மிகவும் துயரமான அம்சம் பெண்கள் தங்கள் குழந்தைகளைக் கூட கொல்கிறார்கள் என்பதுதான். அவர்களுக்கு தங்கள் குடும்பம் அல்லது கணவனின் குடும்பத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதுதான் இதன் பொருள்."என ரெஜிதா கோபாலகிருஷ்ணன் சொல்கிறார்
பெரும்பாலும் தங்களது துணை ஏன் மன அழுத்தத்தில் இருக்கிறார் அல்லது மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை புரிந்துகொள்ள மக்கள் முயற்சிப்பதில்லை என்றும், பின்னர் உதவி தேடுவதற்கான காலம் கடந்துவிடுகிறது எனவும் மருத்துவர் ஜான் சுட்டிக்காட்டுகிறார்.
" கருக்கலைப்பு பெண்களை மனச்சோர்வை நோக்கி தள்ளக்கூடும். விரும்பிய ஏற்பட்ட கரு கலைய நேர்ந்தால் அது மேலும் தீவிரமான ஒரு சமூக காரணமாகக்கூடும்," என்கிறார் அவர்.
"நமது சமூகத்தில் வெள்ளைத் தோல் மீது இருக்கும் மோகம், மாநிறமாக இருப்பவர்களின் வாழ்க்கையை மிகவும் கடினமானதாக மாற்றுகிறது. ஒருவருக்கு ஆதரவாக இருக்கவேண்டிய கணவனோ அல்லது அவரது குடும்பமோ தோலின் நிறத்தை பற்றி கேலி செய்தால் பிரச்னை மேலும் தீவிரமடைகிறது," என்றும் அவர் தெரிவித்தார்.
நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019
- இது, பிபிசி நியூஸ்-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!