news@ilakkiyainfo.com

பிரிவுகள்

28 லட்சம் பேருக்கு கொரோனா ; ஒரு லட்சத்து 95 ஆயிரத்தை கடந்த பலி 

24 Apr, 2020
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்தை கடந்தது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 28 லட்சத்து ஆயிரத்து 65 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 18 லட்சத்து 29 ஆயிரத்து 861 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவர்களில் 58 ஆயிரத்து 368 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் இந்த கொடிய வைரசுக்கு இதுவரை ஒரு லட்சத்து 95 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் அதிகம் பரவியுள்ள நாடுகளின் விவரங்கள்:- அமெரிக்கா - 9,03,775 ஸ்பெயின் - 2,19,765 இத்தாலி - 1,92,994 பிரான்ஸ் - 1,59,828 ஜெர்மனி - 1,54,159 இங்கிலாந்து - 1,43,464 துருக்கி - 1,04,912 ஈரான் - 88,804 சீனா - 82,804 ரஷியா - 68,622 பிரேசில் - 51,073 பெல்ஜியம் - 44,551 நெதர்லாந்து - 36,535 ஸ்விட்சர்லாந்து - 28,677 இந்தியா - 23,452 போர்ச்சீகல் - 22,797 ஈக்வடார் - 22,719 பெரு - 21,648 கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் விவரங்கள் வருமாறு:- அமெரிக்கா - 51,139 ஸ்பெயின் - 22,524 இத்தாலி - 25,969 பிரான்ஸ் - 22,245 ஜெர்மனி - 5,653 இங்கிலாந்து - 19,506 துருக்கி - 2,600 ஈரான் - 5,574 சீனா - 4,632 பிரேசில் - 3,407 பெல்ஜியம் - 6,679 கனடா - 2,294 நெதர்லாந்து - 4,289 சுவிஸ்சர்லாந்து - 1,578 அயர்லாந்து - 1,014 ஸ்வீடன் - 2,152 மெக்சிகோ - 1,069

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!