இஸ்ரேல் தேர்தல் நாளை: "சிறந்த போர்வீரர் என்பதை நினையுங்கள்" - நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் ஆதரவு
27 Oct, 2026
ஒவ்வொரு நாடுகளுக்கும் தனித்தனியாக வரி விதிப்பது, எதிரி நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது, அமெரிக்க குடியுரிமையில் மாற்றம் கொண்டு வருவது என்று தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் தலைப்பு செய்திகளில் வருகிறார்.
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், டொனால்ட் டிரம்ப், உலக தலைவர்களுடன் விவாதிப்பதும், அதன் அருகே உள்ள போர்டில் அமெரிக்காவின் வரைபடம் (மேப்) உள்ளது.
அதில் அமெரிக்காவுடன் கனடா, டென்மார்க்கின் கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா உள்ளிட்ட நாடுகள் இணைக்கப்பட்டுள்ளது.
இது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை இந்த மாதம் தொடக்கத்தில் டொனால்ட் டிரம்ப் தனது சிறப்பு படையை அனுப்பி நாடு புகுந்து அவரை கைது செய்தார்.
அதன்பிறகு தற்போது வெனிசுலாவை அமெரிக்கா கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
இதன் அடுத்தக்கட்டமாக டொனால்ட் டிரம்ப் டென்மார்க்கின் சுயாட்சி பகுதியாக இருக்கும் கிரீன்லாந்தை அபகரிக்க திட்டமிட்டு வருகிறது.
இது ஒரு பனிப்பிரதேசமாகும். மொத்தம் 57 ஆயிரம் என்ற அளவில் மட்டுமே மக்கள் வசிக்கும் நிலையில் கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் டென்மார்க் விற்க வேண்டும் என்று டிரம்ப் கூறி வருகிறார்.
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிகவும் முக்கியம். நாங்கள் இந்த கிரீன்லாந்தை கைப்பற்றாவிட்டால் சீனா அல்லது ரஷ்யா கைப்பற்றிவிடும் என்று டிரம்ப் கூறி வருகிறார்.
இதற்கு கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
அதேபோல், டொனால்ட் டிரம்ப் கனடாவையும் அமெரிக்காவுடன் இணைப்பதில் ஆர்வமாக உள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன.
இந்நிலையில் தான் அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடாவை இணைத்து கொள்வதாக டிரம்ப் கடந்த ஆண்டு பதவியேற்ற சில வாரங்களிலேயே தெரிவித்தார்.
" இப்படி அண்டை நாடுகளை அபகரிக்கும் முயற்சியில் டிரம்ப் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலாவை அமெரிக்காவுடன் இணைத்து அவர் ‛மேப்' வெளியிட்டு இருப்பது உலக அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!