Israel Election : உலகின் மிக விசித்திரமான தேர்தல் முறை — அக்டோபர் 27ல் என்ன நடக்கும்? Explained
25 Oct, 2026
தற்கொலை செய்துகொண்ட தீபக்
வழக்குப்பதிவு ஆனதைத் தொடர்ந்து, ஷிம்ஜிதா முஸ்தபா தலைமறைவானார். போலீஸார் அவரை தேடிவந்த நிலையில் முன் ஜாமின் பெற அவர் முயன்றார். இதற்கிடையே வடகரா பகுதியில் உறவினர் ஒருவரின் வீட்டில் பதுங்கிருந்த அவரை மப்டியில் சென்ற மகளிர் போலீஸார் இன்று கைதுசெய்தனர்.
பின்னர், தனியார் காரில் அவரை கோயிலாண்டி தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் அவரை குந்தமங்கலம் மஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கைதுசெய்யப்பட்ட ஷிம்ஜிதா முஸ்தபா
ஷிம்ஜிதா முஸ்தபாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மஞ்சேரி சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஷிம்ஜிதா முஸ்தபா தனியார் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னால் ஏதோ திட்டம் உள்ளதாக தீபக்கின் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க ஷிம்ஜிதா முஸ்தபாவின் மொபைல் போனை கைப்பற்றி பரிசோதிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!