அமெரிக்காவை மிரளவிடும் ஏவுகணைப் படை.. ஈரானின் புதிய "Missile city".. அப்படி என்ன special?
23 Nov, 2026
இந்தக் கருத்துக்கு சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, துருக்கி, பாகிஸ்தான், கத்தார், குவைத், ஓமன், பக்ரைன், லெபனான், சிரியா, பாலஸ்தீனம் உள்ளிட்ட 14 அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இது பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது என்றும் அந்நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக, அந்த நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ”ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை உட்பட அரபு நாடுகளுக்குச் சொந்தமான பிரதேசங்களின் மீது இஸ்ரேல் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கது" என அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கருத்துகள் சர்வதேச சட்டத்தை மீறுகின்றன. காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் திட்டத்திற்கு நேரடியாக முரணானது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதி அல்லது வேறு அரபு நிலங்களின் மீதும் இஸ்ரேலுக்கு எந்த இறையாண்மையும் இல்லை.
மேற்குக் கரையை இணைப்பதற்கோ அல்லது காஸா பகுதியிலிருந்து பிரிப்பதற்கோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் உறுதியாக நிராகரிக்கிறோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்ச்சை வெடித்ததைத் தொடர்ந்து, தான் கூறியது மிகையாகச் சொல்லப்பட்ட ஒரு கருத்து என்றும்,
இஸ்ரேல் அண்டை நாடுகளின் நிலங்களைக் கைப்பற்ற விரும்பவில்லை என்றும் ஹக்காபி விளக்கமளித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இஸ்ரேல் இணைப்பதற்கு ஹக்காபி அடிக்கடி தனது ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!