news@ilakkiyainfo.com

பிரிவுகள்

31 வருட ரகசியம், சரத்குமார் இதுக்கெல்லம் பயப்படுவாரா? நேர்காணலில் போட்டு உடைத்த பிரபலம்

21 Feb, 2026
நாட்டாமை படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான தகலை சரத்குமார் கனல் கண்ணன் இருவரும் ஒரு பேட்டியில் கூறியுள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள சரத்குமார், நாட்டாமை படத்தில் நடந்த சம்பவம் குறித்து ஃபைட் மாஸ்டர் கனல் கண்ணணுடனான உரையாடலில் கூறியுள்ளார். 31 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் – சரத்குமார் இருவரும் இணைந்தாலே அந்த படம் பெரிய வெற்றிப்படமாக மாறும் என்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு இவர்களின் கூட்டணி பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. இவர்கள் கூட்டணியில் வெளியான புரியாத புதிர், நாட்டாமை, நட்புக்காக, பட்டாளி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை சொல்லலாம். அந்த வகையில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான நாட்டாமை திரைப்படம், இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான தகலை சரத்குமார் கனல் கண்ணன் இருவரும் ஒரு பேட்டியில் கூறியுள்ளனர். இதில் பேசிய கனல் கண்ணன், இவர் பார்க்கத்தான் தைரியசாலி போல் இருக்கிறார். ஆனால் இவருக்கு உயரத்தில் இருந்து குதிப்பது  என்றால் பயம் என்று சொல்ல, முதலில் விபத்தை பார்த்துவிட்டேன். மீண்டும் விபத்து ஆகிவிட்டால் என்ன செய்வது என்று தான் நான் ஹைட்டில் குதிக்க மாட்டேன். ஆனால் என்னையும் இவர் குதிக்க வைத்துவிட்டார் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அவர் சொல்ல வந்த விஷயத்தை நானே சொல்லிவிடுகிறேன். நாட்டாமை படப்பிடிப்பின்போத உயரத்தில் இருந்து குதிக்க வேண்டும். கேமரா எல்லாம் பிக்ஸ் பண்ணிட்டு இருக்காங்க, நான் இவரிடம் மாஸ்டர் நான் குதிக்க வேண்டுமா என்று கேட்க, அண்ணே நீங்கதான் குதிக்கணும் என்று சொல்லிவிட்டார். நான் தயங்கியடியே இருந்தேன். ஆனால் அவர் அண்ணே பிரபு தேவா குதிக்கிறாரு நீங்க ஆக்ஷன் ஹீரோ உங்களுக்கு என்ன? சும்மா குதிங்க அண்ணே என்று சொன்னார். நான் தயார் ஆகாமலே மேலே போய்விட்டேன். மேலே இருந்து என் நண்பர்களிடம் கேட்டபோது அவர்களும் எல்லாம் ஓகே என்பது போல் சொன்னார்கள். வேண்டாம் என்று சொல்வார்கள் என்று பார்த்தேன். ஆனா அப்பா சொல்லவில்லை. அதன்பிறகு இன்னொருவருடன் கேட்டபோது அவரும் அப்படியே சொன்னார். அதற்குள் இவர், ரெடியாகிவிட்டு, கேட்டார். நான் மாஸ்டர் நீங்க கேமரா ஆன் பண்ணுங்க நான் குதிக்கிறேன் என்று சொன்னேன். அவர் அதேபோல் ஆன் பண்ண நான் குதித்துவிட்டேன். அப்போது பின்னால் சரியான வலி வலித்தது. குதித்து முடித்தவுடன், நான் இவரிடம் மாஸ்டர் பிரபுதேவா உண்மையாகவே குதித்தாரா என்று கேட்டேன். அதற்கு அவர் யாருங்க முட்டாள், இவ்வளவு மேல் இருந்து குதிப்பானா என்று கேட்டார். அப்போது நான் அவரை துரத்தி துரத்தி அடித்தேன் என்று காமெடியாக கூறியுள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!