news@ilakkiyainfo.com

பிரிவுகள்

32 வீடுகளில் கொள்ளையிடச் சென்று 32 ஆவது முறையும் பொலிஸாரால் கைதான திருடன் !

16 Dec, 2023
காலி - கராப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 31 வைத்தியர்களின் வீடுகளில் கொள்ளையிட்டு விளக்கமறியலில் இருந்தவர் முப்பத்திரெண்டாவது முறையும் வீடொன்றில் கொள்ளையிட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் இரவு நேரத்தில் ஜன்னல் வழியாக சட்டத்தரணி ஒருவரின் வீடொன்றினுள் நுழைந்து 20 இலட்சத்து 6 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைளை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளார். இவர் கொள்ளையிட்ட பொருட்களை காலி பிரதேசத்திலுள்ள நகைக்கடையொன்றில் விற்பனை செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கராப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!