உலகளாவிய கமாடிட்டி மற்றும் நிதிச் சந்தைகளில் கடந்த சில மணிநேரங்களாக நிலவி வரும் உச்சக்கட்ட பரபரப்பிற்குப் பின்னால் ஒரு மாபெரும் சந்தை ஏமாற்று வேலை (Market Manipulation) ஒளிந்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று இரவே ஈரான் மீது தாக்குதல் நடத்தி கார்க் தீவை கைப்பற்றப்போவதாக அறிவித்த நிலையில், அடுத்த சில மணிநேரத்தில் ஈரான் உடன் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்த கையெழுத்திட தயாராகியுள்ளோம் என டிரம்ப் அறிவித்தார். இது அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இன்று அமெரிக்க பங்குச்சந்தையில் எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ்எக்ஸ்' (SpaceX) நிறுவனத்தின் பிரம்மாண்ட பொதுப் பங்கு வெளியீட்டை (IPO) வெளியாக உள்ள நிலையில், பங்குச் சந்தையைச் செயற்கையாக உயர்த்துவதற்காகவே இத்தகைய போலி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அமெரிக்காவுடன் எவ்வித இறுதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என்று ஈரான் மிகத் திட்டவட்டமாகப் அறிவித்துள்ளது.
39-வது முறை டிரம்ப்பின் பொய் வாக்குறுதி
சர்வதேச முன்னணி ஊடகமான சிஎன்என் வெளியிட்டுள்ள அதிரடித் தரவுகளின்படி, அமெரிக்க - ஈரான் போர் தொடங்கியதிலிருந்து "இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் மிக அருகில் உள்ளது" என்று அதிபர் டிரம்ப் உரிமை கொண்டாடுவது இது 39-ஆவது முறையாகும் என அறிவித்துள்ளார்.
டிரம்ப் இதுவரை வெளியிட்ட அத்தனை 'ஒப்பந்த நெருக்கடி' அறிவிப்புகளையும் ஈரான் ஒவ்வொரு முறையும் அடியோடு மறுத்து வந்துள்ளது.
ஈரானிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிரம்பின் தற்போதைய வாக்குறுதி அனைத்தும் அவரது முந்தைய போலி அறிவிப்புகளைப் போலவே முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டியவை" என்று மிகக் கடுமையாகச் விமர்சனம் செய்துள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் உள்ளிட்ட அனைவரும் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக டிரம்ப் கூறிய வாதத்தை ஈரானிய வெளியுறவு அமைச்சகம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
ஈரானை அசைக்க முடியாது..
ஈரானிய செய்தி நிறுவனமான 'ஃபார்ஸ்' (Fars) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்காவுடன் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும், ஒருவேளை ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என்றால் ஈரான் விதிக்கும் அனைத்துக் கோரிக்கைகளையும் அமெரிக்கா நிபந்தனையின்றி ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!