news@ilakkiyainfo.com

பிரிவுகள்

4 இந்திய தேசிய திரைப்பட விருதுகளை குவித்த பொன்னியின் செல்வன்

16 Aug, 2024
இந்திய தேசிய திரைப்பட விருதுகள் இன்று வெள்ளிக்கிழமை (16) அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ் திரைப்படமாக, மணிரத்னம் தயாரித்து இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 தெரிவு செய்யப்பட்டது. இந்த படத்துக்கு 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2022ம் ஆண்டுக்கான இந்திய தேசிய திரைப்பட விருதுகள் இன்றைய தினம் டில்லியில் அறிவிக்கப்பட்டன. * சிறந்த தமிழ் திரைப்படம் - பொன்னியின் செல்வன் பாகம் 1 *சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரகுமான் (பொன்னியின் செல்வன் 1) 7வது தேசிய விருதை பெறுகிறார். * சிறந்த ஒலி அமைப்பு - பொன்னியின் செல்வன் பாகம் 1 * சிறந்த ஒளிப்பதிவு - பொன்னியின் செல்வன் பாகம் 1 * சிறந்த அனிமேஷன் படம் - 'ஏ கோகனட் ட்ரீ' * சிறந்த திரைப்பட புத்தகம் - கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் * சிறந்த சண்டை பயிற்சியாளர் - அன்பறிவு * சிறந்த நடிகை - திருச்சிற்றம்பலம் படத்தின் நாயகி நித்யா மேனன் * சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது - ரவி வர்மன் * சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - காந்தாரா * சிறந்த பாடகர் - பிரம்மாஸ்திரா படத்துக்காக கேசரியா பாடலை பாடிய அர்ஜித் சிங்குக்கு சிறந்த கன்னட மொழி திரைப்படம் - கே.ஜி.எப்., 2 * சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி * சிறந்த நடன இயக்குனர்கள் - ஜானி, சதீஷ் (திருச்சிற்றம்பலம்) * சிறந்த பின்னணி பாடகியாக - பாம்பே ஜெயஸ்ரீ * சிறந்த மலையாள திரைப்படம் - சவுதி வெள்ளைக்கா * சிறந்த தெலுங்கு திரைப்படம் - கார்த்திகேயா 2 * சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அன்பறிவ் (காந்தாரா)

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!