இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
படக்குறிப்பு, யுக்ரேன் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்ட இடங்கள்
ரஷ்ய விமானப்படைக்கு 7 பில்லியன் டாலர் (5 பில்லியன் யூரோ) இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று எஸ்பியூ மதிப்பிட்டுள்ளது. மேலதிக தகவல்களை விரைவில் வெளியிடுவதாகவும் அது உறுதியளித்துள்ளது. யுக்ரேனின் கூற்றுகள் சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை.
யுக்ரேனில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள நான்கு ரஷ்ய விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டதாக பிபிசியிடம் ஞாயிற்றுக்கிழமை எஸ்பியூ தெரிவித்தது.
தாக்குதலுக்கு உள்ளானதாக யுக்ரேன் தெரிவித்துள்ள இடங்கள்
″ இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பெலாயா, சைபீரியா
• மர்மன்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஒலென்யா, ரஷ்யாவின் வட கிழக்கு எல்லை
•மத்திய ரியாசான் பிராந்தியத்தில் உள்ள தியாகிலெவோ
•மத்திய இவாநோவா பிராந்தியத்தில் உள்ள இவாநோவா
தாக்குதலுக்கு உள்ளான ரஷ்ய போர் விமானங்களில் அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் Tu-95, Tu-22M3 மற்றும் A-50 போர் விமானங்களும் அடங்கும் என எஸ்பியூ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒட்டுமொத்த ஆபரேஷனும் "தளவாட ரீதியில் மிகவும் சவால் நிறைந்தது" என அவர்கள் விவரித்துள்ளனர்.
யுக்ரேன், உக்ரைன், ரஷ்யா, போர், டிரோன் தாக்குதல்
"எஸ்பியூ முதலில் எஃப்பிவி டிரோன்களை ரஷ்யாவுக்குள் கடத்திச் சென்றது, அதன் பின்னர் மரப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன. ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த பிறகு இந்த டிரோன்கள் இந்த மரப் பெட்டிகளின் கீழ் மறைத்து வைக்கப்பட்டன. அவை சரக்கு வாகனங்களில் வைக்கப்பட்டன" எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் "சரியான நேரத்தில் தொலைவில் இருந்தே இந்த மரப்பெட்டிகள் திறக்கப்பட்டு ரஷ்ய போர் விமானங்களைத் தாக்க டிரோன்கள் புறப்பட்டுச் சென்றன" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இர்குட்ஸ்க் கவர்னர் இகோர் கோப்சேவ் சைபீரியாவின் ஸ்ரெட்னியில் உள்ள பெலாயா ராணுவத் தளத்தை தாக்கிய டிரோன்கள் ஒரு லாரியில் இருந்து தான் ஏவப்பட்டன என்பதை உறுதி செய்தார்.
தாக்குதலுக்கு உள்ளான இடம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லையென்றும் கோப்சேவ் தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
இதர தாக்குதல்களும் இதே போல லாரிகளில் இருந்து கிளம்பிய டிரோன்களில் இருந்து தான் நடந்தன என்று ரஷ்ய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு பெட்ரோல் நிலையத்தில் அருகில் இருந்த லாரியில் இருந்து டிரோன்கள் பறந்து சென்றதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.
மர்மன்ஸ்கில் நடந்த தாக்குதலைப் பதிவு செய்துள்ள ரஷ்ய ஊடகங்கள் வான் பாதுகாப்பு வேலை செய்ததாகவும் தெரிவிக்கின்றன. இர்குட்ஸ்க் மீது நடந்த தாக்குதலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் ஐந்து பிராந்தியங்களில் உள்ள விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சமூக ஊடகப் பதிவின் மூலம் உறுதிபடுத்தியது.
யுக்ரேன், உக்ரைன், ரஷ்யா, போர், டிரோன் தாக்குதல்
இவாநோவா, ரியாசான் மற்றும் அமூர் பிராந்தியங்களில் ராணுவ விமானப்படை தளங்களில் அனைத்து தாக்குதல்களும் தவிர்க்கப்பட்டன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடைசி தளம் எஸ்பியூ தரப்பினால் குறிப்பிடப்படாத ஒன்று.
டர்மன்ஸ்க் மற்றும் இர்குட்ஸ்க் பிராந்தியங்களில் " டிரோன்கள் ஏவப்பட்ட பிறகு பல விமானங்களில் தீப்பிடித்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தீ அணைக்கப்பட்டு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. "இந்த பயங்கரவாத தாக்குதல்களில் பங்கு கொண்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு யுக்ரேன் மீதான தொடர் தாக்குதல்களில் 472 டிரோன்கள், 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தான் தற்போது வரை ரஷ்யா நிகழ்ச்சிய மிகப்பெரிய ஒற்றை டிரோன் தாக்குதலாக உள்ளது. 385 வான் பொருட்களை அழித்ததாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.
ஒரு பயிற்சி மையத்தின் மீதான ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!