பிரிட்டன் மற்றும் பிரான்ஸால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டு இன்று வரை சியோனிச யூத கோடீஸ்வரர்களால் பாதுகாக்கப்பட்டு வரும், 22 சியோனிச சார்பு அரபு கொடுங்கோலர்களிடமிருந்து, ஒடுக்கப்பட்டு மற்றும் மிருகத்தனமாக நடத்தப்பட்டு வரும் 450 மில்லியன் அரேபியர்களை விடுவிக்க, மத்திய கிழக்கில் இந்தியாவின் அண்மைக் கால கரப்பான்பூச்சி கட்சியின் பாணியிலான எழுச்சிக்கு உரிய நேரம் இப்போது வந்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க பிரதேசங்கள் சுமார் நான்கு நூற்றாண்டுகளாக துருக்கியின் ஒட்டோமன் பேரரசின் கீழ் இருந்தன. 1516 -1517-உலகப் போரில் இந்தப் பேரரசு வீழ்ச்சியடைந்த பின் 1918--1920 காலப்பகுதியில் இப்பகுதிகள் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு காலனித்துவ சக்திகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.
பிரிட்டனும் பிரான்ஸும் 1916 இல் சைக்ஸ்-பைகோட் என்ற ஒப்பந்தத்தில் இரகசியமாகக் கையெழுத்திட்டன.
அதன் பின் மத்திய கிழக்கை துண்டு துண்டாகப் பிரித்து, கவனமாக சோதனை இடப்பட்டு, நுணுக்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரபு அடிமைகள் ஒவ்வொரு பகுதியினதும் ஆட்சியாளர்களாக அமர்த்தப்பட்டனர். அவர்கள் போரின் போது துருக்கி பேரரசுக்கு எதிராக பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இரகசியமாக ஆதரவளித்தனர். பிரிட்டனும் பிரான்ஸும் தான் இந்தப் பகுதியில் அரச குடும்பங்களை உருவாக்கின.கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த அடிமைகளின் சந்ததியினர் தான், இன்றும் தங்கள் பிரிட்டிஷ், பிரெஞ்சு, அமெரிக்க மற்றும் சியோனிச எஜமானர்களுக்கு சேவை செய்து வருகின்றனர். அதற்காக அவர்கள் தங்கள் மக்களை கொடூரமாக அடக்கிக் ஆண்டு கொண்டு அதிகாரத்தில் உள்ளனர்.
இங்கு தற்போது கொடுங்கோன்மை மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. அரபுலக மக்களுக்கு இஸ்ரேலை கண்டிக்கவோ அல்லது தமது உடன் பிறவா சகோதரர்களான பலஸ்தீனர்களை ஆதரிக்கவோ, அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தக் கூட அனுமதி இல்லை. அது மட்டுமன்றி அரசியல் ஆர்வலர்கள், அறிஞர்கள் மற்றும் அறிவுஜீவிகள் கூட கொடுங்கோல் ஆட்சியாளர்களால் நசுக்கப்படுகின்றார்கள்.
டமஸ்கஸின் கசாப்புக் கடைக்காரன் என வர்ணிக்கப்பட்ட சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் அசாத் அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட பின் அவரால் நடத்தப்பட்டு வந்த சிறைச்சாலைகள் மற்றும் சித்திரவதை கூடங்கள் திறக்கப்பட்ட போது, சிரியாவின் அதிகார பீடம் தங்கள் சொந்த மக்கள் மீது புரிந்து வந்த காட்டுமிராண்டித்தனமும் வெளிச்சத்திற்கு வந்தது.
அரசியல் மாற்றங்களுக்கான தேர்தல்கள் பல அரபு நாடுகளில் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் முடிவுகளும் மக்களின் எதிர்ப்பார்ப்புகளும் நசுக்கப்பட்டன. உதாரணமாக, அல்ஜீரியாவில் நடைபெற்ற தேர்தல்களில் இஸ்லாமிய சார்பு கட்சியான எஃப். ஐ. எஸ் வெற்றி பெற்றது. ஆனால் இங்கு ஜனநாயகத்தின் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத பிரான்ஸ் அதை நசுக்கி, இராணுவத்தை அதிகாரத்தில் அமர்த்தியது.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா முழுவதும் ஜனநாயக சார்பு கிளர்ச்சிகளின் அலையாக, அரபு வசந்தம் என்ற போராட்டம் 2010 டிசம்பரில் உருவெடுத்தது. இது அரசாங்கங்களின் ஊழல், மக்கள் மத்தியில் வேலை வாய்ப்யின்மை அதிகரிப்பு, மற்றும் அரசியல் அடக்குமுறை தொடர்பான, பொதுமக்களின் கோபத்தால் உந்தப்பட்டது. இருப்பினும் இந்த ஜனநாயக இயக்கம் அரபு கொடுங்கோலர்களால், அவர்களின் அமெரிக்க--ஐரோப்பிய மற்றும் சியோனிச எஜமானர்களின் ஆதரவுடன் இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்பட்டது.
முகமது முர்ஷி
62 ஆண்டுகளின் பின் 2012 இல் எகிப்தில் முதல் தடவையாக நடத்தப்பட்ட ஜனநாயக ரீதியான, ஜனாதிபதித் தேர்தலின் போது இஸ்லாமிய சார்பு முகமது முர்ஷி, ஜனாதிபதியாக அந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், அவரை பதவியில் இருந்து அகற்ற, சவூதி அரேபிய வஹ்ஹாபிகள், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை பயன்படுத்தி அவர்கள் மூலமாக 11 பில்லியன் டொலர்களை செலவிட்டு, அமெரிக்க-ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் என்பன எகிப்தில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் ஆட்சிக்கு முடிவு கட்டின.
அதன் பிறகு அங்கு அமெரிக்க-ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் என்பனவற்றுக்கு மிகவும் நெருக்கமான, மதச்சார்பற்ற அப்தெல்பத்தா அல் சிசி அதிகாரத்தில் அமர்த்தப்பட்டார். அதன் விளைவு எதிர்ப்பார்க்கப்பட்டது போலவே, அவர் அதன் பிறகு தொடங்கிய, காசாவில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய இனப்படுகொலைகளுக்கு ஆதரவாக இன்றும் அமெரிக்க--இஸ்ரேலிய சக்திகளுக்கு தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.
அரபு கொடுங்கோலர்களைப் பாதுகாத்து ஊக்குவித்துக் கொண்டே, பிரிட்டன் தனது கட்டாய அதிகார ஆணை என்ற போர்வையின் கீழ், சியோனிச யூதர்களுக்கு பலஸ்தீனர்களை படுகொலைகள் மற்றும் இனப்படுகொலைகள் மூலம் கொன்று குவிக்கவும், அந்த மக்களை தமது தாயக பூமியில் இருந்து வெளியேற்றவும், அவர்களின் நிலங்களை பலவந்தமாக அபகரிக்கவும், கொள்ளையடிக்கவும், பூரண ஆதரவளித்தது.
சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து சட்ட மற்றும் தார்மீகக் கொள்கைகளையும் மீறி, இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான குடியேற்ற அரசை நிறுவவும் உதவியது.
இஸ்ரேலை உருவாக்குவதற்காகவும் பலஸ்தீன தேசத்தை துண்டாடவும், தேவையான தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு அவை அச்சுறுத்தப்பட்டன. அன்று முதல் இஸ்ரேல் தனது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய மற்றும் அரபு சர்வாதிகாரிகளின் ஆதரவுடன் இப்பகுதியை ஒரு கொலை களமாக மாற்றியுள்ளது.
காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட இனப் படுகொலைகளுக்கு அமெரிக்கா பிரிட்டன், ஐரோப்பா என்பன பூரண ஆதரவளித்த அதேவேளை, அரபு சர்வாதிகாரிகள் காஸாவை ஒரு கசாப்புக் கடையாக மாற்ற இஸ்ரேலுக்கு சுதந்திரமாக இடம் அளித்தனர்.
அப்பாவி பலஸ்தீன ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை இஸ்ரேல் படுகொலை செய்ததையும், காஸாவின் குடிமக்கள் உள்கட்டமைப்பான கட்டிடங்கள், பள்ளிகள், மருத்துவ மனைகள், நீர் விநியோக மற்றும் வடிகால் கட்டமைப்புக்கள், மின் விநியோக கட்டமைப்புக்கள் என எல்லாமே சிதைக்கப்பட்ட போது, அரபுலகம் கண் மூடி கைகட்டி வேடிக்கை பார்த்து நின்றது. இதன் தொடராக காஸாவை ஒரு தரிசு நிலமாக மாற்றும் கிட்டத்தட்ட அனைத்தையும் இஸ்ரேல் செய்து முடித்தது. இருப்பினும் அரபுலக ஆட்சியாளர்களின் உள்ளங்கள் ஒரு கட்டத்திலும் உருகவில்லை.
காஸாவில் அனாதைகளாக்கப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் எந்த இலக்கும் இல்லாமல் தங்கள் அன்புக்கு உரியவர்களுக்காக அழுது அலைந்து திரிகின்றனர். உணவும் தண்ணீரும் இல்லாமல் அவர்கள் அன்றாடம் கதறி அழுதும் கூட அரபுலக கொடுங்கோலர்களின் இதயங்களை ஒரு போதும் இலகவில்லை.

உலகெங்கிலும் இஸ்லாத்தையும் மற்றும் முஸ்லிம்களையும் அவர்கள் கைவிட்டு விட்டனர். மேலும் ஜெருசலேம் மற்றும் மஸ்ஜித் அல் அக்ஸாவைப் பாதுகாப்பதற்கான அவர்களின் தார்மிகக் கடமையும் அவர்களுக்கு மறந்து போய் விட்டது. பாசிச சியோனிச யூத அமைச்சர்களால் வழிநடத்தப்படும் யூத கொலைகார குண்டர்களால் இன்று மீண்டும் மீண்டும் அந்தப் புனித இடங்கள் சோதனை இடப்படுகின்றன.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் சமய ரீதியான உணர்வுகளை நிராகரித்த ஜனாதிபதி ட்ரம்ப், ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து,
இஸ்லாத்தின் மூன்றாவது மிக முக்கியமான புனித இடமான மஸ்ஜித் அல் அக்ஸா வளாகத்தையும் இஸ்ரேலியர்களிடம் ஒப்படைத்தார். இஸ்ரேல் இராணுவத்தினர் புனித ரமழான் மாதத்தில் கூட மஸ்ஜித் அல் அக்ஸாவை மீண்டும் மீண்டும் தாக்கி, அவமதித்து வருகின்றார்கள்.
அவ்வப்போது எந்த நியாயமான காரணங்களும் இன்றி அதை மூடி விடுகின்றார்கள். பலஸ்தீன மக்களின் ஈத் தொழுகையைக் கூட தடுக்கின்றார்கள்.
சவூதி வஹாபிகள் உள்ளிட்ட அரபு சர்வாதிகாரிகள், மஸ்ஜித் அல் அக்ஸாவை விடுவித்து அதை காப்பாற்றுவதில் எந்த ஆர்வத்தையும் இதுவரை காட்டவில்லை. பல அறிக்கைகளின் படி, இந்த தந்திரங்களை செயல்படுத்துவதில் அமெரிக்கா மிகவும் இன்றியமையாத விதத்தில் முன்னிலை வகிக்கின்றது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை ஒரு பிராந்திய செயற்பாடாக மாற்றுவதற்கு தேவையான பணம், இராஜதந்திர பாதுகாப்பு மற்றும் இராணுவப் பாதுகாப்புக்கு தேவையான கருவிகளையும் அமெரிக்காவே வழங்குகின்றது.
காஸாவில் உள்ள பலஸ்தீன மக்கள் 2023 அக்டோபர் 7 முதல் ட்ரம்ப்பின் வெளிப்படையான ஆதரவுடன் இஸ்ரேலால் வாட்டி வதைக்கப்பட்டு வருகின்றனர். இதே ட்ரம்ப் 2025 மே 13 முதல் 16 வரை வஹாபிய சவூதிக்கும், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் விஜயம் செய்தார். அவரை வரவேற்க பல பில்லியன் டொலர்களை இந்த நாடுகள் செலவிட்டன. இந்த விஜயத்தின் போது ட்ரம்ப் இந்த நாடுகளிடமிருந்து நான்கு ட்ரில்லியன் டொலர்கள் வரையான வணிக ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகளையும் பெற்றுக் கொண்டார்.
ஒட்டு மொத்த அரபு மற்றும் முஸ்லிம் உலகினதும் வெட்கக் கேடான நிலைமை என்னவென்றால், ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பனீஸைப் போன்ற ஒரு துணிச்சலான தலைவரை உருவாக்க முடியாமல் போனதாகும். ஓர் அதிகாரியாக, அவர் காஸாவில் அமெரிக்க-- ஐரோப்பிய--- இஸ்ரேலிய காட்டுமிராண்டித்தனத்தை அச்சமின்றி விமர்சிக்கின்றார். அந்த விடயத்தில் அரபுலகம் தோல்வி அடைந்துள்ளது.
தங்கள் ஆட்சிகள், அதிகாரம், செல்வம் மற்றும் வசதிகளை உறுதி செய்வதற்காக, அமெரிக்காவையும் இஸ்ரேலையும் திருப்திப்படுத்தும் முயற்சியில், இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும், தங்கள் சொந்த மக்களையும் கூட கைவிட்டுள்ள, இந்த அரபு சர்வாதிகாரிகளா ஜெருசலேம் மற்றும் மஸ்ஜித் அல் அக்ஸாவை விடுவிக்கப் போகின்றார்கள் என்ற கேள்வி தான் இன்று எஞ்சியுள்ளது.
பலஸ்தீனர்களை அவர்களின் பாரம்பரிய வீடுகள் மற்றும் நிலங்களிலிருந்து தொடர்ச்சி யாக வெளியேற்றும் நோக்கில், மேற்குக் கரையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இஸ்ரேலியப் படைகளினதும், குடியேற்ற வாசிகளினதும் காட்டுமிராண்டித்தனம் தொடர்பான அரபுலக ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கின் மூலமும் மீண்டும் அவர்களின் துரோகம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீனம் தொடர்பான மனிதாபிமானப் பதிவுகள் திகைப்பூட்டுவதாக உள்ளன. மேலும் அது தொடர்ந்து மோசமடைந்தும் வருகின்றது. பொது மக்கள் கொலைகள், இடப்பெயர்வுகள், பட்டினியால் வாட்டுதல் மற்றும் அடர்ந்த நகர்ப்புறங்களில் தொடர்ச்சியான தாக்குதல்கள் என்பனவற்றின் மூலம், இஸ்ரேல் ஒரு முழு அளவிலான இராணுவ ஆக்கிரமிப்புக்குத் திட்டமிட்டுள்ளது.
இந்த அனைத்து விதமான அட்டூழி யங்களுடன், அரபு சர்வாதிகாரிகள் ஈரான் மீதான அமெரிக்க--- இஸ்ரேலிய சட்டவிரோத போருக்கும் ஆதரவு அளிப்பதானது, இஸ்ரேலும் அரபு சர்வாதிகாரிகளும் அமெரிக்க--- ஐரோப்பிய ஏகாதிபத்திய போர் வெறியர்களின் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை தெளிவாக நிரூபிக்கின்றது.
லத்தீப் பாரூக்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!