ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
விஜயகுமார் முத்துக்கண்ணு தம்பதியின் 2-வது மகளான அனிதாவின் மகள் தியாவுக்கும் அவரது காதலனுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட திருமணம் தொடர்பான புகைப்படங்கள் கடந்த ஒரு வாரமாக இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், பலரும் புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இதனிடையே, திருமணம் முடிந்த கையோடு, தனது சொந்த கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டில், தனது பேத்திக்காக பிரம்மாண்ட ரிஷப்ஷன் ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்வில் வாணவேடிக்கை உள்ளிட்ட பல கொண்டாட்டங்கள் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து விஜயகுமாரின் மகள் அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜயகுமார் ஏற்பாடு செய்த ரிஷப்ஷன் குறித்த வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.View this post on Instagram
இந்த ரிஷப்ஷன் நிகழ்ச்சியில் நடைபெற்ற வாணவேடிக்கை தொடர்பான நிகழ்வு தொடர்பான வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது. அதேபோல் புதுமணப்பெண் தியாவும், தனது தாத்தாவின் அன்பின் பெருமையை வெளிப்படுத்தும் வயைில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். தனது பழைய வீட்டை புதுப்பித்து மாற்றியுள்ள விஜயகுமார், அங்கு தனது தாய் தந்தைக்கு சிலை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.View this post on Instagram
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!