திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
அங்கு நண்டு குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து ஒரு வாரத்தில் சுமார் 4 லட்சம் நண்டு குஞ்சுகள் பொரித்தவுடன் அந்த நண்டுக் குஞ்சுகளை மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதற்காக பத்திரமாக கடலில் கொண்டு போய் விடுகிறது மீன்வளத்துறை.
இது குறித்து கோடியக்கரை மீனவர் நலச் சங்க முன்னாள் செயலாளர் சித்திரவேலிடம் பேசினோம். "கோடியக்கரை கடற்பகுதியில் சீசன் காலத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் படகுடன் வந்து தங்கி மீன் பிடிப்பார்கள். நாள்தோறும் மீன், இறால், நண்டு வகைகளை பிடித்து வருகின்றனர்.
இவற்றில் 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை குஞ்சுகளை பொரிக்கும் கல் நண்டுகளை, உயிருடன் பிடித்து வென்டிலேட்டரில் வைத்து பாதுகாத்து, சீர்காழி அருகேயுள்ள ராஜீவ்காந்தி மீன் குஞ்சு பொரிப்பகத்துக்கு அனுப்பி வைப்போம்.
நாள்தோறும் ஒன்று முதல் ஐந்து நண்டுகள் வரை அனுப்பி வைத்து வருகிறோம். இதை ரூ.1,500 முதல் 2,000 வரை விலை கொடுத்து அதிகாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
குஞ்சுகள் பொரித்தவுடன் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக கடலில் விடுகின்றனர்.
நேற்று பிடிக்கப்பட்ட கல் நண்டு சுமார் 3 கிலோ எடை உள்ளது. இந்த நண்டிலிருந்து சுமார் 5 லட்சம் முட்டைகள் ஒரு வார காலத்தில் வெளிவரும்.
தற்போது இதை ராஜீவ் காந்தி மீன் குஞ்சு பொரிப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்" என்றார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!