news@ilakkiyainfo.com

பிரிவுகள்

5 நாளில் இவ்வளவு வசூலா? முதல் 100 கோடியை நோக்கி சூரி.. பட்டையை கிளப்பும் ’மண்டாடி’!

15 Sep, 2026

நடிகர் சூரியின் நடிப்பில் வெளிவந்திருக்கும் மண்டாடி திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.


மதிமாறன் இயக்கத்தில் சூரி, மகிமா, சுஹாஸ், சத்யராஜ் நடித்த ‘மண்டாடி’ தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியானது. கடல் பின்னணியில் மீனவர்களின் வாழ்க்கை, படகுப்போட்டி ஆகியவற்றை மையமாக கொண்ட இந்த படம், பாசிட்டிவ் விமர்சனங்களால் முதல் நாள் குறைந்த வசூலை தாண்டி 5 நாளில் 65 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. குடும்பத்துடன் பார்க்க ஏற்ற இந்த படம், வரும் வார இறுதியில் 100 கோடி கிளப்பை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை 1 திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி, தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் எல்லோரையும் கவர்ந்தார். 

அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து வெளியான கருடன், கொட்டுக்காளி திரைப்படங்களில் தான் ஏற்ற கதாபாத்திரமாகவே மாறிப்போன சூரி, தன்னுடைய காமெடியன் பிம்பத்தை உடைத்து தன்னால் இப்படியான ரோல்களிலும் நடிக்க முடியும் என்று காண்பித்தார். அதன்பிறகு வெளியான மாமன் திரைப்படம் அவரால் வணிக ரீதியிலான வெற்றியை கொடுக்கமுடியும் என்று நிரூபித்தது. அதன்பிறகு தற்போது வெளியாகியிருக்கும் மண்டாடி திரைப்படம், அவரை 100 கோடி வசூல் கொடுக்ககூடிய ஒரு கதாநாயகனாக மாற்றியுள்ளது.


மதிமாறன் இயக்கத்தில் சூரியின் நடிப்பில் வெளிவந்திருக்கும் மண்டாடி திரைப்படம், மீனவர்களின் வாழ்க்கையையும் அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியையும் மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

சூரியுடன் மகிமா, சுஹாஸ், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். விறுவிறுப்பான திரைக்கதை, பின்னணி இசை, கேமரா ஒர்க் என அனைத்தும் ஒன்று சேர்ந்து அக்கடல் பயணத்திலிருந்து நம்மை வெளிவராதபடி கட்டிப்போடுகின்றன. ஒரு ரம்மியமான திரை அனுபவத்தை கொடுக்கும் மண்டாடி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

  Grossed 65+ CRORES worldwide! 🔥 The love for #Mandaadi keeps growing every day. ❤️ Mandaadi Vagaiyara is ruling the theatres, and the madness is real! 💥#Mandaadi is Running Successfully in theatres near you! 💥@sooriofficial #Suhas #Sathyaraj @Mahima_Nambiar… pic.twitter.com/8hVMXi27co — RS Infotainment (@rsinfotainment) September 15, 2026
கடந்த 10ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான மண்டாடி திரைப்படம், 5 நாளில் 65 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

முதல் நாளில் வசூல் குறைவாக இருந்தாலும், அதற்குபிறகு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்ற மண்டாடி திரைப்படம் வசூலில் ஏறுமுகத்தையே பெற்றுவருகிறது. 


அதுமட்டுமில்லாமல் தியேட்டர்களுக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குடும்பங்களோடு பார்க்ககூடிய படம் என்பதால் வரும் வார இறுதியில் 100 கோடி வசூலை நெருங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒருவேளை 100 கோடி வசூலை கடந்தால் இது சூரியின் திரைவாழ்க்கையில் முதல் 100 கோடி வசூலை ஈட்டும் திரைப்படமாக மாறும்.



கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!