news@ilakkiyainfo.com

பிரிவுகள்

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

06 Sep, 2025
நுவரெலியா - வட்டவளை பிரதேசத்தில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்றுள்ளது. கம்பளையிலிருந்மு ஹட்டன் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது முச்சக்கரவண்டியில் தாய் , தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ள நிலையில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!