news@ilakkiyainfo.com

பிரிவுகள்

50 லட்சம் பேருக்கு கொரோனா - அதிரும் உலக நாடுகள்

20 May, 2020
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது. 50 லட்சம் பேருக்கு கொரோனா - அதிரும் உலக நாடுகள் சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் கொரோனா பரவும் வேகமும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்னிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 50 லட்சத்து 3 ஆயிரத்து 170 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 27 லட்சத்து 6 ஆயிரத்து 483 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 45 ஆயிரத்து 400 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த கொடிய வைரசில் இருந்து 19 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா அதிகம் பரவிய நாடுகளின் விவரங்கள்:- அமெரிக்கா - 15,70,908 ரஷியா - 3,08,705 ஸ்பெயின் - 2,78,803 பிரேசில் - 2,71,885 இங்கிலாந்து - 2,48,818 இத்தாலி - 2,26,699 பிரான்ஸ் - 1,80,809 ஜெர்மனி - 1,77,842 துருக்கி - 1,51,615 ஈரான் - 1,24,603 இந்தியா - 1,06,750 பெரு - 99,483 சீனா - 82,965 கனடா - 79,112 சவுதி அரேபியா - 59,854 பெல்ஜியம் - 55,983 மெக்சிகோ - 54,346

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!