news@ilakkiyainfo.com

பிரிவுகள்

6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

20 Sep, 2023
6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், புதிய விலைகள் புதன்கிழமை (20) முதல் அமுலுக்கு வரும் எனவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது. சோயாமீட் விலை 45 ரூபாவினாலும், உருளைக்கிழங்கு விலை 40 ரூபாவினாலும், நெத்தலி 30 ரூபாவினாலும், வெள்ளைப் பூடு விலை 25 ரூபாவினாலும், பெரிய வெங்காயத்தின் விலை 15 ரூபாவினாலும், சிகப்பு பருப்பு 6 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, சோயாமீட்டின் புதிய விலை 580 ரூபாவாகவும், உருளைக்கிழங்கின் புதிய விலை 290 ரூபாவாகவும், நெத்தலியின் புதிய விலை 1,100 ரூபாவாகவும், வெள்ளைப் பூடு புதிய விலை 620 ரூபாவாகவும், வெங்காயத்தின் புதிய விலை 195 ரூபாவாகவும், ஒரு கிலோ பருப்பின் புதிய விலை 299 ரூபாவாகும் என சதொச மேலும் குறிப்பிடுகிறது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!