news@ilakkiyainfo.com

பிரிவுகள்

71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு.. விருது வென்ற படங்கள் முழு விவரம்

01 Aug, 2025
"புதுடெல்லி:இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகினறன. 71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. 2023-ம் ஆண்டு திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்று அளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கான தேர்வில் பங்கேற்றன. இந்தத் தேர்வு பட்டியலில் 332 படங்கள் பரிசீலிக்கப்பட்டன.இந்நிலையில், 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த திரைப்படம் : '12த் பெயில்' சிறந்த நடிகர்: ஷாருக் கான் (ஜவான்), விக்ராந்த் மாசி(12த் பெயில்) 35 ஆண்டாக சினிமாவில் கோலாச்சும் நடிகர் ஷாருக்கான் முதல் முறையாக சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகை: ராணி முகர்ஜி (திருமதி சாட்டர்ஜி மற்றும் நார்வே) சிறந்த தமிழ் படம்: பார்க்கிங் சிறந்த குணச்சித்திர நடிகர்: எம்.எஸ்.பாஸ்கர் (பார்க்கிங்) சிறந்த திரைக்கதை: ராம்குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங்) சிறந்த மலையாள படம்: 'உள்ளொழுக்கு' சிறந்த குணச்சித்திர நடிகை: ஊர்வசி சிறந்த இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ்குமார் (வாத்தி) சிறந்த குறும்படம்: 'லிட்டில் விங்ஸ்' (தமிழ்) சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது: சரவண மருது சவுந்தரபாண்டின், மீனாட்சி சோமன் (லிட்டில் விங்ஸ்) ஆவணப் படப்பிரிவில் 'தி டைம்லெஸ் தமிழ்நாடு' தேர்வானது. சிறந்த இயக்குனர்: சுதீப்தோ சென் (தி கேரளா ஸ்டோரி)சிறந்த ஒளிப்பதிவு பிரிவுக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒலி அமைப்பு: அனிமல்சிறந்த தயாரிப்பு: 2018 (மலையாளம்) சிறந்த தெலுங்கு திரைப்படம்: 'பஹவந்த் கேசரி' சிறந்த கன்னட திரைப்படம்: கண்டீலு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி விரைவில் விருது வழங்குவார்.",

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!