news@ilakkiyainfo.com

பிரிவுகள்

77 ஆயிரம் கோடி பேரரசின் வாரிசு; கணவர் ராம் சரணை விட பணக்காரரா உபாசனா? சொத்து மதிப்பு விபரம்

03 Feb, 2026
ராம் சரண் - உபாசனா நட்சத்திர ஜோடிகள் மட்டுமல்ல, பல ஆயிரம் கோடி மதிப்பிலான வணிக சாம்ராஜ்யத்தை நிர்வகிக்கும் ஆளுமைகளுமாவார். தெலுங்கு திரையுலகின் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா கொனிடேலா ஆகியோர் வெறும் நட்சத்திர ஜோடிகள் மட்டுமல்ல, பல ஆயிரம் கோடி மதிப்பிலான வணிக சாம்ராஜ்யத்தை நிர்வகிக்கும் ஆளுமைகளுமாவார். இவர்களது சொத்து மதிப்பு மற்றும் பின்னணி குறித்த இந்த பதிவில் பார்ப்போம். ராம் சரண் மற்றும் உபாசனா ஆகிய இருவரின் தனிப்பட்ட சொத்துக்களை மட்டும் கணக்கிட்டால், அதன் மதிப்பு சுமார் ரூ2,700 கோடி எனத் தெரிகிறது. ராம் சரண் ஒரு படத்திற்கு ரூ70 முதல் ரூ100 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இவருக்கு சுமார் ரூ1,400 கோடி சொத்து உள்ளது. அவரது மனைவி உபாசனா தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ800 கோடி முதல் ரூ1,300 கோடி வரை இருக்கும் என அறிக்கைகள் கூறுகின்றன. இவர்களது குடும்பத்தின் தூணான சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு சுமார் ரூ1,650 கோடி. உபாசனா சுமார் ரூ77,000 கோடி மதிப்புள்ள அப்பல்லோ குழுமத்தின் பின்னணியில் இருந்து வந்தவர். அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டியின் பேத்தி இவர். அப்பல்லோ குழுமத்தின் சி.எஸ்.ஆர் (CSR) பிரிவுத் தலைவராகவும், யுவர் லைஃப் ('URLife') என்ற டிஜிட்டல் ஹெல்த்கேர் தளத்தின் நிறுவனராகவும் உள்ளார். லண்டன் ரீஜண்ட்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் தனது படிப்பை முடித்துள்ளார். தனது மாமியார் சுரேகா கொனிடேலாவுடன் இணைந்து 'அத்தம்மாஸ் கிச்சன்' (Athamma's Kitchen) என்ற புதிய உணவகத் தொழிலைத் தொடங்கியுள்ளார். சொத்துத் தகராறுகளைத் தவிர்க்க இவர்களது குடும்பத்தில் ஃபேமிலி கான்ஸ்டியூஷன் ( 'Family Constitution') என்ற எழுதப்பட்ட விதிமுறைகள் உள்ளன. இதன் மூலம் பெரிய முடிவுகள் முன்னரே தீர்மானிக்கப்படுவதால் குடும்பத்தில் சண்டைகள் வருவதில்லை என உபாசனா சமீபத்தில் வெளிப்படுத்தினார். அதேபோல் ராம் சரண் திரைப்படங்கள் தவிர, பல துறைகளில் முதலீடு செய்துள்ளார்: கொனிடேலா புரோடக்ஷன் கம்பெனி என்ற தயாரிப்பு நிறுவனம், ஹைதராபாத் போலோ ரைடிங் கிளப் மற்றும் 'டெவில்ஸ் சர்க்யூட்' (Devil's Circuit) உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளராக இருக்கும் ராம் சரண், 'ட்ரூஜெட்' (TruJet) ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் இருக்கிறார். ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் சுமார் ரூ30-40 கோடி மதிப்பிலான பங்களாவில் வசிக்கும் இந்தத் தம்பதிக்கு, பெங்களூரு மற்றும் மும்பையிலும் சொகுசு வீடுகள் உள்ளன. இவர்களிடம் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் (₹12.87 கோடி) மெர்சிடிஸ் மேபேக் (₹3.16 கோடி) பெராரி போர்டோஃபினோ (₹3.5 கோடி) உள்ளிட்ட ஆடம்பர கார்கள் உள்ளன. சினிமா மற்றும் வணிகம் என இரண்டிலும் இந்த ஜோடி ஒரு பவர் ஹவுஸாகத் திகழ்கிறது. 2012-ல் திருமணமான இவர்களுக்கு க்ளின் காரா (Klin Kaara) என்ற மகள் உள்ளார். கடந்த வாரம் ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!