9 வயது மகளை கொடூரமாக தாக்கிய தாய்| வீடியோ எடுத்த தந்தை.. போலீஸில் புகார்!-Viralvideo
குழந்தைகளைப் பாதுகாக்க நிறைய சட்டங்கள் இருந்தும், பல இடங்களில் அவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், குஜராத்தில் பெற்ற மகளையே, தாய் ஒருவர் தோசை கரண்டியால் தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பெண் ஒருவர் 9 வயது சிறுமி ஒருவரைக் கீழே தள்ளி தோசைக் கரண்டியைக் கொண்டு அடிக்கிறார்.
அதில் வலி தாங்க முடியாமல் அந்தச் சிறுமி கதறி அழுகிறார். ஆனாலும் கல்நெஞ்சம் கொண்ட அந்தப் பெண், சிறுமியின் கழுத்தையும் பிடித்து நெரிக்கிறார்.
பின்னர், அந்தச் சிறுமியை தரதரவென இழுத்துக்கொண்டு அறைக்குள் நுழைகிறார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதைப் பார்க்கும் பலரும் அந்தப் பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, காவல் துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!