12 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட பாலம் வழியாக சீனா சென்றார் வடகொரிய ஜனாதிபதி
25 Oct, 2026
AI
ஏலியன்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது 'ஏரியா 51' தான். இது அமெரிக்காவின் நெவாடா பாலைவனத்தில் அமைந்துள்ள ஒரு மிக ரகசியமான விமானப்படைத் தளம். பல ஆண்டுகளாக அமெரிக்க அரசாங்கம் இப்படி ஒரு இடம் இருப்பதையே இல்லை என்று மறுத்து வந்தது, 2013-ல் தான் அதிகாரப்பூர்வமாக இந்த இடத்தின் இருப்பை ஒப்புக்கொண்டது.
ராணுவ ரீதியாக இது ஒரு சோதனைத் தளம் என்று சொல்லப்பட்டாலும், உலக மக்கள் இதனை வேற்றுக்கிரகவாசிகளின் ஆய்வுக்கூடமாகவே பார்க்கின்றனர். மிகவும் பலத்த பாதுகாப்பு கொண்ட இந்த இடத்திற்கு மேல் விமானங்கள் பறக்கக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏரியா 51-ஐச் சுற்றிப் பல மர்மக் கதைகள் உலவுகின்றன. குறிப்பாக, 1947-ஆம் ஆண்டு ரோஸ்வெல் பகுதியில் விழுந்ததாகக் கருதப்படும் ஒரு வேற்றுக்கிரக விண்கலமும், அதிலிருந்த ஏலியன்களின் உடல்களும் இங்குதான் கொண்டு வரப்பட்டுப் பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அங்கு பணிபுரிந்த பாப் லாசர் போன்ற சில விஞ்ஞானிகள், "அங்கு வேற்றுக்கிரகத் தொழில்நுட்பத்தைப் பிரித்தெடுத்து (Reverse Engineering), அதன் மூலம் அமெரிக்கா அதிநெருக்கடி காலங்களில் பயன்படுத்தக்கூடிய அதிநவீன ரகசிய விமானங்களை உருவாக்குகிறது" என்று கூறி உலகையே அதிர வைத்தனர்.
மனிதக் கண்களுக்குத் தெரியாத விமானங்கள், ஒலியை விடப் பல மடங்கு வேகத்தில் செல்லும் விண்கலங்கள் ஆகியவை அங்கு சோதிக்கப்படுவதாக எல்லாம் நம்பப்படுகிறது.
ட்ரம்ப் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவின் மூலம், பல தசாப்தங்களாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த 'டாப் சீக்ரெட்' கோப்புகள் பொதுமக்களின் பார்வைக்கு வரவுள்ளதாக சொல்லப்படுகிறது
இது உண்மையாகவே ஏலியன்கள் பூமிக்கு வந்தார்களா? ஏரியா 51-ல் மறைத்து வைக்கப்பட்டிருப்பது என்ன? விண்வெளியில் மனிதர்களைத் தாண்டிய சக்தி வாய்ந்த உயிரினங்கள் உள்ளனவா? போன்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!