news@ilakkiyainfo.com

பிரிவுகள்

BB Tamil 8 Day 27: `சண்டை போட எனர்ஜி இல்ல'; பிசுபிசுக்கும் டாஸ்க்; 5 பேர் வருகை என்ன செய்யும்?- (வீடியோ இணைப்பு)

04 Nov, 2024
புதிதாக ஐந்து வைல்ட் கார்ட் என்ட்ரிகள் வரவிருக்கிறார்கள். எனவே ‘டபுள் எவிக்ஷன்’ இருக்கும் என்று முதலில் கூறப்பட்டது. அன்ஷிதாவின் வெளியேற்றம் உறுதியாகி விட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால்... போட்டியாளர்கள் சரியாக பதில் சொல்லாமல் மௌனம் காத்த போது ‘நான் போயிட்டு அப்புறமா வரேன்’ என்று கொட்டாவி விடுவது போல் பாவனை செய்து பிரேக்கில் கிளம்பி சிரிப்பு மூட்டினார் விஜய்சேதுபதி. முந்தைய வாரத்தில் நடந்த விஷயம் இது. நேற்றைய எபிசோடைப் பார்க்கும் போது உண்மையில் நமக்குத்தான் கொட்டாவி வந்தது. விசே சொன்ன வசனத்தை அவரிடமே சொல்ல வேண்டும் என்பது போல அத்தனை சலிப்பான எபிசோடு. மீண்டும் அதேதான். வீக்கெண்டில் மட்டுமே பிக் பாஸ் பார்க்கும் பார்வையாளர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களையும் அடித்துத் துரத்துவது என்று பிக் பாஸ் டீம் கங்கணம் கட்டிக் கொண்டது போல் இருக்கிறது. இது டீமின் இயக்கம் என்றாலும் இந்த நிகழ்ச்சியின் முகமாக விஜய்சேதுபதி இருப்பதால் அவர் மீதுதான் நிறைய விமர்சனங்கள் வரும். ஒரே தலைப்பை நீண்ட நேரத்திற்கு இழுப்பதை விட்டு நிகழ்ச்சியை சுவாரசியமாக மாற்ற முயற்சிக்க வேண்டும். செய்வார்களா? பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 27 வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S8 02-11-2024 Vijay Tv Show -Day 27

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!