ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
divya ganesh
அந்த வகையில் இந்த சீசனில் அதிக தொகை பெற்றவர் என்றால் திவ்யா கணேஷ் தான். அவருக்கு சம்பளமாக நாள் ஓன்றுக்கு முப்பதாயிரம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வைல்டுகார்டு போட்டியாளர் என்பதால்,. அவர் வீட்டில் இருந்த 80 நாள்களுக்கு அந்த தொகையே சுமார் 25 லட்சம் வரை கிடைக்கிறது.
டைட்டில் வின்னருக்கான தொகை 50 லட்சம். இந்த தொகையில் சுமார் ரூ,15 லட்சம் வரியாகச் சென்றால், ரூ.35 லட்சம் கிடைக்கலாம். ஆக மொத்தத்தில் 60 லட்சத்துக்கும் அதிகமாகவே இவருக்குக் கிடைக்கும் என்கிறார்கள்.
அடுத்து கானா வினோத். இவர் பணப் பெட்டியில் எடுத்துச் சென்ற தொகை பதினெட்டு லட்சம். இதில் ஐந்தரை லட்சம் வரை வரியாகப் போய் விடும்.
தவிர இவருக்கு சம்பளமாக நாள் ஒன்றுக்கு எட்டாயிரம் வரை பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் நிகழ்ச்சியில் இருந்த 100 நாட்களைக் கணக்கிட்டால் எட்டு லட்சம் கிடைக்கும். மொத்தத்தில் சுமார் இருபது லட்சம் வரை இவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
எனவே இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கியவர்கள் எனக் குறிப்பிட்டால் முதல் இடத்தில் திவ்யாவும் இரண்டாவது இடத்தில் கானா வினோத்தும் இருக்கின்றனர்.
பணப்பெட்டியுடன் வினோத்
அதேநேரம் இறுதிச் சுற்று வரை வந்த மற்ற போட்டியாளர்களுக்கு, அவர்களுக்கான தினசரி ஊதியம் மட்டுமே வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த சீசனில், நாள் ஒன்றுக்கு கலையரசனுக்கு ரூபாய் எட்டாயிரமும், கனி, எஃப் ஜே., துஷார், ஆதிரை ஆகியோருக்கு பத்தாயிரமும் பேசப்பட்டாதாகக் கூறப்படுகிறது.
அரோரா, வியானா இருவருக்கும் 12,000 ரூபாய் என்கிறார்கள். பிரவீன், பிரவீன் காந்தி, அப்சரா, சபரி, திவாகர் ஆகியோருக்கு 15 முதல் இருபதாயிரத்துக்கு இடைப்பட்ட தொகை பேசப்பட்டதாம்.
வைல்டு கார்டு மூலம் சென்ற நான்கு பேருக்குமே முப்பதாயிரம் என்றார்கள்.
நிறைவாக இந்த சீசனில் சம்பளமே இல்லையென்றால் கமருதீன், பார்வதி, நந்தினி மூன்று பேரைச் சொல்லலாம் நந்தினி நிகழ்ச்சி தொடங்கிய மூன்றாவது நாளே வெளியேறி விட்டார்.
பார்வதி, கமருதீன் இருவருக்கும் ரெட் கார்டு தரப்பட்டதால் அவர்களுக்கும் ஊதியம் இருக்காது எனக் கூறப்படுகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!