சுபிக்ஷா, ரம்யா, அரோரா ஆகிய மூவரும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள்போல. “நாம தினமும் ஒருத்தரை டார்கெட் பண்ணி தூக்கணும்’ என்று சுபிக்ஷா ஆவேசமாகச் சொல்ல அதை ஆமோதித்துக் கொண்டிருந்தார் ரம்யா.
இவர்களின் இப்போதைய டார்கெட் பார்வதி போலிருக்கிறது. (அந்த லேடி திவாகரை சொரண்டிப் பார்க்காதீங்கம்மா! பிரச்சினையாயிடும்!)
“நான் காலைல அஞ்சுமணிக்கே எழுந்துட்டேன். ஒரு டீக்கு தேவுடு காக்க வேண்டியிருக்கு” என்று பிரவீன்காந்தி அனத்த “எங்களுக்கு கிடைச்ச பவரை வெச்சு நாங்க தூங்கறோம்…
உங்களுக்கு என்ன இப்ப?” என்று சூப்பர் டீலக்ஸ் வீடு பந்தா காட்ட “அப்புறம் நான் வெளிநடப்பு செஞ்சுடுவேன். என் ஆதரவு உங்களுக்கு கிடைக்காது” என்று இயக்குநர் மிரட்ட “சரி.. வயசான ஆளு.. சுகர்ல ஏதாவது ஆயிடப் போகுது” என்று மனமிரங்கி வலது காலை எடுத்து வைத்து வெளியே வந்தார்கள்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 2
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S9 | 07-10-2025 Vijay Tv Show- Day 02
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!