சென்னை: சின்னத்திரையின் மிகப்பெரிய திருவிழாவான 'பிக் பாஸ் சீசன் 10' நிகழ்ச்சியில் தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு புதிதாக சாதாரண மக்களும் (Common Man) போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டில் களமிறங்கி உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாதாரண மக்களும் கலந்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியானதில் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பிக் பாஸ் வாய்ப்புக்காக விண்ணப்பித்திருந்தனர்.
பல கட்டக் கடுமையான சோதனைகளுக்கு பிறகு 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, இறுதியாக கடினமான சவால்களைக் கடந்து 8 பேர் இறுதிப் பட்டியலுக்கு வந்தனர்.
இந்த காமன் மேன் போட்டியாளர்களை தேர்வு செய்ய ஓவியா, ஆரி அர்ஜுனன் மற்றும் ராஜு ஜெயமோகன் ஆகியோர் இருந்தனர். இந்த தேர்வு நிகழ்ச்சியை பிக் பாஸ் சீசன் 7 பிரபலம் மாயா சுவாரசியமாகத் தொகுத்து வழங்கினார். பல்வேறு விதமான டாஸ்க்குகள், மன அழுத்த சோதனைகளுக்கு பிறகே அந்த 8 திறமைசாலிகள் பிக் பாஸ் பைனலுக்கு வந்தனர்.
மேடையில் விஜய் சேதுபதி அதிரடி:
தேர்வு செய்யப்பட்ட 8 போட்டியாளர்களை மேடைக்கு அழைத்த தொகுப்பாளர் விஜய் சேதுபதி, அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து அன்போடு வரவேற்றார்.
ஆனால், அடுத்த வினாடியே அங்கிருந்த அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை தந்தார். அதாவது உங்க கையில் இருக்குற பூங்கொத்துக்குள்ள ஒரு ரகசியச் சீட்டு இருக்கும். அந்த சீட்டில் 'End of the Journey'னு எழுதப்பட்டிருந்தா, அவங்க பிக் பாஸ் வீட்டிற்குள் போக முடியாது...
இப்போதே வெளியேற வேண்டும் என்றார்.
3 சாமானியர்கள்:
இதையடுத்து, மணிவண்ணன், ஷோபா, ஷாமா, முனியம்மாள், ஜெசன் என 5 பேர் களத்தில் இருந்தனர். இவர்களில் இறுதியாக 3 பேருக்கு மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் அதிர்ஷ்டக் கதவு திறந்தது.
இதில் ஷாமா,முனியம்மாள், ஜெசன் ஆகிய மூன்று காமன் மேன் போட்டியாளர்களும் அதிக வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்டு, கெத்தாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இதன் மூலம் பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல் முறையாக சாதாரண மக்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!