news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Bigg Boss 7 Day 62: அர்ச்சனாவுக்கு வந்த கைத்தட்டல்; அதிர்ச்சியடைந்த பூர்ணிமா! - வெளியேறியது யார்?- வீடியோ

04 Dec, 2023
மனம் புண்படும் வகையில் விக்ரம் மீது ஜோக் அடிக்கறாங்க. ஆனா அவரு அதுக்கு வாய்ஸ் அவுட் பண்ண மாட்றாரு” என்று சொல்லி விக்ரமிற்கு கயிறு அளித்தார் அனன்யா. பிக் பாஸ் நிகழ்ச்சியை தினமும் பார்க்காதவர்கள்கூட, கமல் வருகிறார் என்பதற்காகவே வார இறுதி எபிசோடுகளைப் பார்ப்பார்கள். மற்றவர்களுக்கும் இந்த ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த விசாரணை நாட்களின் மீதான ஈர்ப்பும் சுவாரசியமும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறதோ என்று தோன்றுகிறது.   இன்று கமலை விடவும் அதிக ஒன்லைனர்களை அடித்து பலத்த கைத்தட்டல்களைப் பெற்றவர் கூல் சுரேஷ். விஷ்ணுவின் வார்த்தை வன்முறைகளை கமல் அத்தனை அழுத்தமாக கண்டிக்கவேயில்லை. மேலும் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளை முன்பெல்லாம் ‘வெ..’ என்று சொல்லி முடிப்பதற்குள் முடித்து விடுவார்கள். இப்போது என்னடாவென்றால், ‘வெள்ளிக்கிழமை, விடியும் வேளை, வாசலில் கோலம் போட்டேன்’ என்கிற பாடல் நீளத்திற்கு இழுக்கிறார்கள். எனில் கமல் தன்னுடைய நேரத்தை குறைத்துக் கொள்கிறாரா? பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? வீடியோ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 02-12-2023 Vijay Tv Show- Day 62

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!