விஷ்ணு பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, எவிக்ஷன் கார்டை நீட்டினார் கமல். அதில் ‘சுரேஷ்’ என்கிற பெயர் இருந்தது. “கேட்டு திறக்கும். அந்த வழியா வாங்க. மதில் மேல ஏற வேணாம்” என்று கிண்டலடித்தார் கமல்.
கமல் சிலரை சரியாக விசாரிப்பதில்லை, பாரபட்சம் காட்டி விட்டு விடுகிறார், சிலரிடம் மட்டும் அதிகமாக காட்டம் காட்டுகிறார்’ என்றெல்லாம் புகார்கள் வருகின்றன. அவருடைய விசாரணை முறை பொதுவாக எப்படி அமையும் என்பதற்கான உதாரணமாக இந்த எபிசோடு இருந்தது.
தனது தவற்றை உணர்ந்து ‘ஐயா மன்னிச்சுடுங்க’ என்று சரணாகதி தத்துவத்தை ஒருவர் பின்பற்றினால் அவர்களை கமல் அதிகம் குடாய்வதில்லை.
மாறாகத் தனது தவற்றை விதம் விதமாக நியாயப்படுத்திக் கொண்டேயிருந்தால் போட்டு வெளுத்து விடுகிறார். அதற்காக ‘அறிவிருக்கா?’ என்பது மாதிரியான முரட்டுத்தனத்தைக் கையாளாமல், தவறு செய்தவர் அதை உணரும்படியான வார்த்தைகளை இட்டு பேசுவது நல்ல விஷயம். ஆனால் பெரும்பாலானவர்கள் மசாலா ஆக்ஷன் காட்சிகளைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
மன்னிப்பு கேட்டுவிடும் வகையில் மாயா, நிக்சன் போன்றவர்கள் எளிதாகத் தப்பித்து விடுகிறார்கள். விஷ்ணு, பூர்ணிமா போன்றவர்கள் ‘விளக்கம் சொல்கிறேன்’ என்று இன்னமும் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள்.
இதை இந்த எபிசோடிலும் கண்டிருக்க முடியும். ஆனால் ரவீனா என்கிற எக்ஸ்பயரி ஆன விஷபாட்டில், இந்த இரண்டிலும் சிக்காமல் சிரித்துக் கொண்டே சைக்கிள் கேப்பில் ஓட்டும் லாரி இருக்கிறதே?! அடேங்கப்பா!
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
வீடியோவை பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 16-12-2023 Vijay Tv Show -Day 76
Bigg Boss 7 Day 75: டான்ஸ் மாரத்தான்; சபதம் எடுத்த தினேஷ்; ஸ்ட்ராட்டஜி குறித்து மாயா சொன்ன சீக்ரெட்- வீடியோ
டான்ஸ் மாரத்தான் கரன்சியில் நிகழ்ந்த பண மோசடி, மணியின் கேப்டன்சி போன்றவைத் தவிர விசாரிக்க இந்த வாரம் பெரிதான விஷயங்கள் இல்லை.
இது எழுபத்தைந்தாவது நாள். வன ஆர்வலர் சுரேஷ், இந்த வாரம் தலையில் புறா கூடு வைத்திருந்த ராசியோ, என்னமோ, வீடு சர்ச்சையின்றி பெரும்பாலும் அமைதியாக இருந்தது. ‘இப்படியே ரெண்டு நாளைக் கொண்டு போய் முடிச்சிடுங்கப்பா’ என்று கேப்டன் மணி கூட மகிழ்ச்சியடைந்தார். அந்தளவிற்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி.
ஆனால் குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தது போல, சென்டிமென்ட் ஆக பேசி கலங்கி முடித்த பிறகு ‘அடுத்த வாரம் யாரைத் தூக்கலாம்?’ என்று எபிசோடின் இறுதியில் ஆவேசமாகத் திட்டமிடவும் இவர்கள் தவறவில்லை. இது தவிர ரவீனாவின் மைக் மரணம் அடைந்த துர்சம்பவமும் நடந்தது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
வீடியோவை பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 15-12-2023 Vijay Tv Show-Day 75
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!