ரவீனாவைத் தனியாக இழுத்துச் சென்ற மணி, பிரிவுத்துயரடன் கட்டியணைத்துக் கொண்டது நெகிழ்வான காட்சி. “அடுத்த வாரம் வந்துடுவீங்கள்ல?” என்று ஜோக் அடித்து சூழலை இயல்பாக்க முயன்றார் ரவீனா.
ரவீனாவும் நிக்சனும் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். இந்த தொன்னூறு நாட்களில் ஒருவரைப் பற்றிய அபிப்ராயம் ரோலர் கோஸ்டர் மாதிரி மேலே கீழே இறங்கி எப்படியெல்லாம் நமக்கு மாறுகிறது என்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
‘எளிய பின்னணியிலிருந்து வந்த இளைஞன். நல்லா வரட்டும்’ என்கிற கரிசனம் ஆரம்பத்தில் நிக்சன் மீதிருந்தது. ஆனால் ஐஷூவுடன் அவர் தொடர்ந்து பழகியதால் ஆட்டத்தில் ஃபோகஸ் கலைந்ததை மக்கள் ரசிக்கவில்லை.
ஐஷூ வெளியேறியவுடன் மீண்டும் நிக்சனின் ஆட்டத்தில் சூடு கிளம்பியது. ஆனால் ‘சொருகிருவேன்’ என்கிற ஒரு வார்த்தை அவர் இமேஜை மீண்டும் சிதறடித்தது. போதாக்குறைக்கு மாயாவுடனான கூட்டணி வேறு. எனவே எதிர்ப்பை அதிகமாக சம்பாதித்து வெளியேற்றப்பட்டாரோ?!
மணியோடு ஒப்பிடும் போது ரவீனா ஆக்டிவ்வான பிளேயராக இருந்தார். குழந்தைத்தனத்தையும் மீறிய புத்திசாலித்தனம் இருந்தது. கூடவே கள்ள மௌனங்களும். ஆனால் மணியோ ரவீனாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்றதால் ஆரம்பத்தில் நிறைய அதிருப்தியைச் சம்பாதித்தார்.
தனிப்பட்ட வகையிலும் அவரது இருப்பு வெளியே அதிகம் தெரியவில்லை. ஆனால் எப்படியோ தப்பித்துக் கொண்டே வந்தார். ரவீனாவின் விருந்தினர் வருகை இந்த நிலைமையை தலைகீழாக மாற்றியது.
மணியின் மீதான அனுதாப அலை பெருகியது. மணியை விடவும் சிறந்த ஆட்டக்காரரான ரவீனா வெளியேற மணி இன்னமும் நீடிப்பது இந்த சீசனின் விநோதமான ஆச்சரியங்களுள் ஒன்று.
ஒருவரின் மீதான எதிர்வினைகளுக்கு அவரேதான் காரணமாக இருக்கிறார் என்பதுதான் இந்த குறுக்குவெட்டு சித்திரத்தின் நீதி. தீதும் நன்றும் பிறர் தர வாரா.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 31-12-2023 Vijay Tv Show- வீடியோ
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!