சென்னை: பிரபலத் தொலைக்காட்சியின் மாபெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான 'பிக் பாஸ் சீசன் 10' இன்று கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளிலேயே யாருமே எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சித் திருப்பத்தை அமைத்து நெஞ்சை படபட்க்க வைத்துள்ளார் விஜய் சேதுபதி.
வழக்கமாக ஒவ்வொரு போட்டியாளராக மேடைக்கு அழைத்து, உரையாடி வீட்டிற்குள் அனுப்பி வைக்கும் விஜய் சேதுபதி, இம்முறை நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஒரு 'அணு குண்டை' தூக்கிப் போட்டார்!
ஒரே மேடையில் 3 நடிகைகள்: நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அடுத்தடுத்து மூன்று பிரபல சின்னத்திரை நாயகிகள் மேடைக்கு அழைக்கப்பட்டனர் விஜய் டிவியின் ஹிட் சீரியலான 'மகாநதி' காவிரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் லட்சுமி பிரியா முதல் போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார்.
மகாநதி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புகழ் ஷாதிகா இரண்டாவது போட்டியாளராக மேடைக்கு வந்தார். தெய்வமகள், ராஜா ராணி போன்ற ஹிட் தொடர்களில் நடித்த ஷஃப்னம் மூன்றாவது போட்டியாளராக இணைந்தார்.
மூவரையும் ஒரே நேரத்தில் மேடையில் நிறுத்திய விஜய் சேதுபதி, உங்க மூணு பேர்ல யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்குதோ அவங்கதான் பிக் பாஸ் வீட்டிற்குள் போக முடியும் என அறிவித்து போட்டியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சி அளித்தார்.
இதற்காக அங்கிருந்த அரங்கு பார்வையாளர்களிடம் 1, 2, 3 என பொத்தான்கள் கொண்ட சிறப்பு ரிமோட் கொடுக்கப்பட்டு உடனடியாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது
வாக்குப்பதிவு முடிவுகள்: லட்சுமி பிரியா அதிக வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்து, முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டிற்குள் கெத்தாக நுழைந்தார். ஷாதிகா இரண்டாவது அதிக வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் வாய்ப்பை பெற்றார்.
ஆனால், மிக குறைவான வாக்குகளை பெற்ற நடிகை ஷஃப்னம், பிக் பாஸ் வீட்டிற்குள் காலடி கூட எடுத்து வைக்க முடியாமல் மேடையில் நின்றபடியே உடனடியாக எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே ஒரு போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு, வீட்டின் மெயின் டோர் பக்கமே செல்லாமல் மேடையிலேயே எலிமினேட் செய்யப்பட்டது இதுவே முதல்முறை.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!