news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Daddy's little princess..' Ultrasound பரிசோதனையில் அப்பா பேச சிரித்த Unborn குழந்தை..! #Video

03 Aug, 2026
அல்ட்ராசவுண்ட் அறையில் அப்பாவின் குரல் கேட்டவுடன் கருவில் இருந்த பெண்குழந்தை புன்னகைத்தது குடும்பத்தையும் மருத்துவர்களையும் உற்சாகப்படுத்திய நெகிழ்ச்சி தருணமாக மாறியது.

கனடாவில் லியா ஒலிவேரா என்ற கர்ப்பிணிக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யும் போது, கணவர் வயிற்றருகே குனிந்து மகளிடம் அன்பாகப் பேசினார். “காலை வணக்கம், இனிய சனிக்கிழமை, உனக்குப் பசிக்கிறதா?” என்று கேட்ட சில நொடிகளில், கருவில் இருந்த குழந்தை புன்னகைத்தது அந்த திரையில் தெரிந்தது. தந்தையின் குரலுக்கு குழந்தை அளித்த இந்த பதில் குடும்பத்தினரையும் மருத்துவர்களையும் நெகிழச்செய்தது.



கனடாவில் வழக்கமான மகப்பேறுக்கு முந்தைய அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின்போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. கருவில் இருந்த குழந்தை, தனது தந்தையின் குரலைக் கேட்ட பிறகு சிரித்ததாகக் கூறப்படும் காட்சி, அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லியா ஒலிவேரா என்ற பெண்ணுக்கு நடைபெற்ற அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின்போது, அவரது கணவர் கர்ப்ப வயிற்றின் அருகே குனிந்து, பிறக்கவிருந்த தங்கள் மகளிடம் அன்பாகப் பேசினார். முதலில் வயிற்றில் முத்தமிட்ட அவர், “காலை வணக்கம்... இனிய சனிக்கிழமை” என்று கூறியதுடன், “உனக்குப் பசிக்கிறதா?” என்றும் கேட்டார்.

   

அதன் சில நொடிகளுக்குப் பிறகு, அல்ட்ராசவுண்ட் திரையில் குழந்தை சிரிக்கிற காட்சி தெரிகிறது. இதைக் கண்ட குடும்பத்தினரும் மருத்துவ ஊழியர்களும் உற்சாகமடைந்தனர்.

பிறக்கும்முன்பே தந்தையின் குரலுக்கு குழந்தை அளித்ததாகக் கூறப்படும் இந்த அழகான தருணம், குடும்பத்தினருக்கு மறக்க முடியாத நினைவாக மாறியுள்ளது.

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும், https://www.facebook.com/reel/2116523242603505

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!