news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Donald Trump போலவே இருக்கும் எருமை.. Selfie எடுக்க படையெடுக்கும் மக்கள்!

18 May, 2026
வங்கதேசத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போல தோற்றம் கொண்ட எருமை உலகளவில் வைரலாகி உள்ளது.

ஈத் அல் அதா பண்டிகையை முன்னிட்டு வங்கதேசத்தில் டொனால்ட் ட்ரம்ப் என பெயரிடப்பட்ட அல்பினோ எருமைக்கு கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது. 


இளஞ்சிவப்பு தோல், தங்க நிற முடி காரணமாக ட்ரம்ப் தலைமுடியை நினைவூட்டும் இந்த எருமை, சமூக வலைதளங்களில் “உலகின் வித்தியாசமான எருமை” என வைரலாகி, இளைஞர்கள், குழந்தைகள் செல்பி எடுக்க வரிசையாக வருகிறார்கள்.

வங்கதேசத்தில் அரிய வகை அல்பினோ எருமை ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. 

இளஞ்சிவப்பு நிற தோல் மற்றும் தலையில் தங்க நிற முடி போன்ற தோற்றம் கொண்ட இந்த எருமைக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெயர் சூட்டப்பட்டிருப்பது உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது.

வங்கதேசத்தின் நாராயண்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் வளர்க்கப்படும் இந்த எருமை சுமார் 700 கிலோ எடை கொண்டதாக கூறப்படுகிறது. 

தலையில் உள்ள தங்க நிற முடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமுடியை நினைவூட்டியதால், பண்ணை உரிமையாளரின் குடும்பத்தினர் அதற்கு டொனால்ட் ட்ரம்ப் என பெயர் வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!