Israel Election : உலகின் மிக விசித்திரமான தேர்தல் முறை — அக்டோபர் 27ல் என்ன நடக்கும்? Explained
25 Oct, 2026
அமெரிக்காவில் சிறை
2010-ல் தனது சொந்த அமைப்பான Jalisco New Generation (CJNG) தொடங்கியபோது, அவன் ஒரு சாதாரண ரவுடியாக இருக்க விரும்பவில்லை. ஒரு ராணுவத் தளபதியைப் போலத் தனது ஆட்களுக்குப் பயிற்சி அளித்து, நவீன ரகத் துப்பாக்கிகள் மற்றும் கவச வாகனங்கள் என ஒரு சிறு நாட்டை எதிர்க்கும் அளவுக்குத் தனது படையைப் பலப்படுத்தினான்.
2015-ல் தன்னைத் துரத்தி வந்த ராணுவ ஹெலிகாப்டரையே ராக்கெட் லாஞ்சர் மூலம் சுட்டு வீழ்த்தியபோது, ஒட்டுமொத்த அரசாங்கமும் அதிர்ச்சியில் உறைந்தது. இதன் மூலம் மெக்சிகோவின் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சில ஆண்டுகளிலேயே தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்தான்.
நெமேசியோவின் (Nemesio Oseguera Cervantes) மூளை ஒரு கார்ப்பரேட் சி.இ.ஓ-வைப் போலச் செயல்பட்டது.
'ஃபெண்டானில்' (methamphetamine) எனும் உயிருக்கு ஆபத்தான போதைப்பொருளை அமெரிக்காவிற்குள் கடத்துவதில் அவன் ஒரு தனி சாம்ராஜ்யத்தையே நடத்தினான்.
எல் மென்ச்ச "El Mencho"
இதன் மூலம் சுமார் 20 பில்லியன் டாலர் (₹1.6 லட்சம் கோடி) சொத்துக்களைக் குவித்து, உலகப் பணக்காரக் குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பிடித்தான்.
இவனைப் பிடித்துத் தருபவர்களுக்கு அமெரிக்கா 125 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்தும், அடர்ந்த காடுகளுக்குள் மறைந்திருந்து பல ஆண்டுகள் அரசாங்கத்தைச் சவாலுக்கு இழுத்தது இவனது தந்திரம்.
எவ்வளவு பலம் வாய்ந்தவனாக இருந்தாலும், காலம் அவனுக்குச் சிறுநீரகக் கோளாறு என்ற வடிவில் ஒரு பின்னடைவைத் தந்தது.
உடல்நலக் குறைவால் நடமாட்டத்தை குறைந்த அவன், காடுகளுக்குள் ரகசிய மருத்துவமனை அமைத்துத் தலைமறைவாக இருந்தான். இறுதியாக, பிப்ரவரி 2026-ல் ஒரு ரகசிய உளவாளி, மற்றும் காதலி கொடுத்த தகவலின் அடிப்படையில் ராணுவம் அவனது மறைவிடத்தைச் சூழ்ந்தது.
தப்பிக்கும் வழியின்றி நடந்த அந்தப் பயங்கரமான துப்பாக்கிச் சண்டையில் படுகாயமடைந்தான்.
அவனை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லும் வழியிலேயே அவனது மூச்சு நின்றது. ஒரு ஏழை விவசாயியாகத் தொடங்கி, உலகையே அச்சுறுத்திய ஒரு கொடூர சகாப்தம் அத்தோடு முடிவுக்கு வந்தது.!
.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!