கலைஞர் கருணாநிதி இல்லாத இந்த நான்கு ஆண்டுகள்?
"குடும்பத்தோடு இருந்தாலும்கூட தலைவர் இல்லாதது தனிமைப்படுத்தப்பட்ட மாதிரி இருக்கிறது.
நான் இளம் வயதிலேயே தந்தையை இழந்தவன். எனக்கு ஒரு தந்தையாக, தலைவராக, எல்லாவற்றுக்கும் மேலாக இறைவன் போன்றவர் கலைஞர்.
அவருடன் இறுதி மூச்சு இருக்கும்வரை இருந்தேன். ஆனால், அவர் இல்லாத இந்த நான்கு ஆண்டுகள் வெறுமைதான்.
எங்கும் செல்வதில்லை. செய்திதாள்களை வாசிப்பது, புத்தகம் படிப்பது என வீட்டிலேயே நாட்கள் கழிகின்றன. எப்போதாவது நினைவிடத்திற்கும் அம்மாவைப் பார்க்க கோபாலபுரமும் சென்று வருவேன்"
அவரின் நினைவாற்றல் குறித்து?
"அவரது நினைவாற்றல் அமானுஷ்யமான நினைவாற்றல். நான் பார்த்த மனிதர்களில், படித்த பெரும் தலைவர்களில் கேள்விப்பட்டதைவிட மிக அதிகமான நினைவாற்றல் உள்ளவர்.
அதுமட்டுமல்ல, ஐன்ஸ்டீனுக்கு ஐக்யூ அதிகம் என்பது எல்லோருக்கும் தெரியும். அவருக்கு இணையான ஐக்யூ உடையவர் என்று டாக்டர் அம்பேத்கரை சொல்வார்கள்.
என்னைப் பொறுத்தவரை ஐன்ஸ்டீனுக்கு நிகராக, அம்பேத்கருக்கு நிகராக ஐக்யூ உள்ளவர் கலைஞர். எல்லா விஷயத்தையும் நினைவில் பதிவு செய்திருப்பார்"
கலைஞருக்கு பேனா சிலை… எப்படி பார்க்கிறீர்கள்?
"அவருக்கு அடையாளமே பேனாதான். `எனது செங்கோல் போனாலும் எழுதுகோலை யாராலும் பறிக்கமுடியாது' என்று பேனாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். இறுதிவரை எழுதிக்கொண்டிருந்தவர். அதனால், அந்தப் பேனா முக்கியமானது. பேனாவையும் அவரையும் பிரித்துப் பார்க்க முடியாது".
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!