news@ilakkiyainfo.com

பிரிவுகள்

Nuwara Eliyaயில் அதிசயம்! வாழை மரத்தின் நடுப்பகுதியில் முளைத்த வாழைக்குலை – மக்கள் திரண்டு பார்வை

19 May, 2026

Nuwara Eliya மாவட்டத்தின் கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டுத் தோட்டத்தில் அரிய இயற்கை நிகழ்வு ஒன்று பதிவாகியுள்ளது.


பொதுவாக வாழை மரத்தின் உச்சிப் பகுதியில் இருந்து வெளிவரும் வாழைக்குலை, இம்முறை மரத்தின் இடைப்பகுதியிலேயே – இரு தண்டுகளுக்கிடையில் இருந்து உருவாகியுள்ளமை அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


இந்த விசித்திரமான வளர்ச்சி முறையை காண அயலவர்கள் மற்றும் சுற்றுப்புற மக்களும் தொடர்ந்து அந்த வீட்டிற்கு வருகை தருகின்றனர்.


சிலர் இதனை இயற்கையின் அரிய மாற்றமாகக் கருதுகின்றனர். அதேவேளை, மற்றொருபங்கு மக்கள் இதனை தெய்வ அதிசயமாகவும் விளக்கி வருகின்றனர்.


வாழைமரத்தின் உட்பகுதியில் சிக்கியபடி வெளிவந்துள்ள இந்த வாழைக்குலை தற்போது சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி பேசுபொருளாக மாறியுள்ளது.


இயற்கையின் எதிர்பாராத மாற்றங்களை மீண்டும் நினைவூட்டும் இந்த சம்பவம், பலரிடமும் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!