news@ilakkiyainfo.com

பிரிவுகள்

O/L பெறுபேறுகள் குறித்து பரவும் போலிச் செய்திகள் ; பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை

25 May, 2026

2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர (O/L) பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக O/L பெறுபேறுகள் வெளியாகிவிட்டதாக பல்வேறு சமூக ஊடக தளங்களில் செய்திகள் மற்றும் பதிவுகள் பகிரப்பட்டு வரும் நிலையில், அவை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர், 2025 ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சை பெறுபேறுகள் ஜூன் மாதத்தின் நடுப்பகுதிக்குள் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சை கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடு முழுவதும் நடைபெற்றிருந்தது.

இந்த நிலையில், பெறுபேறுகள் வெளியாகிவிட்டதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்கள் பரப்பப்படுவதால் பரீட்சார்த்திகள் மன அழுத்தத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகின்றனர் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!