ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இருவரும் அதாவது ராஷ்மிகா மந்தனா மற்றும் கீர்த்தி சனோன் என இருவரும் படத்தில் தன் பாலின ஈர்ப்பாளராக நடிக்கிறார்களாம். இந்த தகவல் தற்போது மொத்த பாலிவுட்டையும் அதிர வைத்துள்ளது.
லெஸ்பியன்: இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் லெஸ்பியனாக நடிக்க முடிவெடுத்துள்ளது மிகவும் தைரியமான முடிவு என்றும், இந்த படமும் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த தகவலை படக்குழு தரப்பில் இருந்து யாரும் தெரிவிக்கவில்லை என்றாலும், படத்தின் கதை குறித்து தெரிந்தவர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது.
படப்பிடிப்பு: இது மட்டும் இல்லாமல் ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் முடிந்து சில மாதங்களுக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்களாம். ராஷ்மிகா மந்தனா தன்பாலின ஈர்ப்பாளராக நடிக்கிறார் என்ற தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திருமணம்: நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணம் வரும் 26ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர் அரண்மனையில் நடைபெறுகிறது.
அதேபோல் மார்ச் மாதம் 4ஆம் தேதி இவர்களின் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. திருமண வரவேற்பு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது .
அதற்கான ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!