SK26 டைம் ட்ராவல் கதையா? ஹாலிவுட்டில் இருந்து வெங்கட் பிரபு வெளியிட்ட போட்டோ வைரல்!
சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணைந்து உருவாக்கி வரும் SK26 திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக ‘துப்பாக்கியை பிடிங்க சிவா’ என்று விஜய் கூறிய பிறகு சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட மிக முக்கியமான படமாக இந்த SK26 பார்க்கப்படுகிறது.
இப்படம் ஒரு Sci-Fi படம் என்று முதல் நாள் முதல் தகவல் பரவிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த தகவலை மேலும் வலுக்கும் வகையில் ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
SK26 படத்தின் வலுவான VFX பணிகளுக்காக, இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் நோக்கி சென்றுள்ளனர். இந்த ஸ்டுடியோவில் சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அதனை caption-ஆக “The Future is here” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ரசிகர்கள் கருத்து:
-
சிவகார்த்திகேயன் தான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்று சொல்கிறாரா?
-
அல்லது படம் டைம் ட்ராவல் கதை என்பதை hint பண்ணுறாரா?
வெங்கட் பிரபுவின் அந்த ஒரு போட்டோவே SK26 படத்துக்கான எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு உயர்த்தி இருக்கிறது. படம் 2025ல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!