"நெருங்கும் ராகுல்.. விலகும் விஜய்... அந்தரத்தில் காங்கிரஸ் - த.வெ.க கூட்டணி?
24 Nov, 2026
அலி ஷெஹா எனும் பனியாஸ் நகரைச் சேர்ந்தவர், அங்கு நடந்த வன்முறையால் தனது குடும்பத்துடன் வெள்ளிக்கிழமையே அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
நகரத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தொலைபேசியில் பேசிய அவர், ஆயுதபடையினர் தனது அபார்ட்மெண்ட் கட்டிடத்திலிருந்து 100 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் கூடியிருந்ததாகவும், வீடுகள் மற்றும் குடியிருப்பாளர்களை நோக்கி குறிபார்த்து சுடுவதுடன், சில நேரங்களில் குடியிருப்பாளர்களின் அடையாள அட்டைகளைக் கேட்டு, அவர்களின் மதம் மற்றும் பிரிவைச் சரிபார்த்த பின்னர் கொன்றதாகவும் தெரிவித்தார். ஆயுதபடையினர் சில வீடுகளை தீ வைத்ததுடன், கார்களை திருடியும் வீடுகளை கொள்ளையடித்ததாகவும் அவர் கூறினார்.
மனித உரிமை கண்காணிப்பு நிறுவனத்தின் தலைவரான ரமி அப்துரஹ்மான், பழிவாங்கும் கொலைகள் சனிக்கிழமை அதிகாலையில் நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதற்கு முன்பு இந்த குழு வழங்கிய புள்ளிவிவரம் 600-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறியது. இதன் பிறகு அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சிரியாவின் வடமேற்கு கிராமமான அல்-ஜனூதியாவில், சிரியா கடற்கரையில் நடந்த மோதல்களில் கொல்லப்பட்ட நான்கு சிரியா பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் சனிக்கிழமை பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பலர் கலந்து கொண்டனர்.
Syria: 2 நாள் தாக்குதலில் 1000-க்கும் மேற்பட்டோர் கொடூர கொலை... சிரியாவில் நடந்த கோர சம்பவம்..
ஒரு பிரதேக் குழியில் அடக்கம்
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு படையினர் அசாத் ஆதரவாளர்களின் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளது. மேலும் அத்துமீறல்களை தடுக்க கடற்கரை பிராந்தியத்தை சுற்றியுள்ள அனைத்து சாலைகளையும் அதிகாரிகள் மூடியுள்ளனர்.
சனிக்கிழமை காலையில், மத்திய கிராமமான துவாய்மில் முந்தைய நாள் நடத்தப்பட்ட பழிவாங்கும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 31 பேரின் உடல்கள் ஒரு பிரதேக் குழியில் அடக்கம் செய்யப்பட்டதாக அந்த பகுதியினர் தெரிவித்தனர்.
கொல்லப்பட்டவர்களில் ஒன்பது குழந்தைகளும் நான்கு பெண்களும் இதில் அடங்குவர். பிரேதக் குழியில் வரிசையாக வைக்கப்பட்டுள்ள வெள்ளைத் துணியால் மூடப்பட்ட உடல்களின் புகைப்படங்களை அங்குள்ள செய்தி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளனர் அவர்கள்.
லெபனானின் நாடாளுமன்றத்தில் அலாவைட் பிரிவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஹைதர் நாசர், பாதுகாப்புக்காக பொதுமக்கள் சிரியாவிலிருந்து லெபனானுக்கு தப்பியோடுவதாகக் கூறினார். அது குறித்து சரியான எண்ணிக்கை தனக்குத் தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சிரியாவிலுள்ள ஹமெய்மிம் ரஷ்ய விமானத் தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும், சிரியாவின் குடிமக்களாகவும் தங்கள் நாட்டிற்கு விசுவாசமாகவும் உள்ள அலாவைட்களை சர்வதேச சமூகம் பாதுகாக்க வேண்டும் என்றும் நாசர் கூறினார்.
அசாத் அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டதிலிருந்து, பல அலாவைட்கள் தங்கள் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டதாகவும் மேலும் புதிய அதிகாரிகளுடன் சமரசம் செய்து கொண்ட சில முன்னாள் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் அதிபர் அசாத்தின் கீழ், அலாவைட் பிரிவினர் இராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்து வந்தனர். புதிதாக அமைந்த அரசாங்கம் கடந்த சில வாரங்களாக நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான தாக்குதல்களுக்கு அவரது ஆதரவாளர்களை குற்றம் சாட்டியுள்ளது.
சிரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட மத அடிப்படையிலான வன்முறைகளை குறித்து பிரான்ஸ் தனது வேதனையையும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளது.
இந்த குற்றங்கள் குறித்து வெளிப்படைத்தன்மையோடு நியாயமான விசாரணைகள் நடத்தப்படுவதை சிரியா இடைக்கால அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரான்ஸ் கோரிக்கையும் விடுத்துள்ளது.
பெண்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்யயும் நோக்கோடு சர்வதேச மகளிர் தினத்தை நேற்று கொண்டாடினோம். ஆனால் அதே தினத்தில் சிரியாவில் பெண்கள், சிறுமிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் ஈவு இறக்கமின்றி கொல்லப்பட்டுள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!