Israel Election : உலகின் மிக விசித்திரமான தேர்தல் முறை — அக்டோபர் 27ல் என்ன நடக்கும்? Explained
25 Oct, 2026
வருஷத்துக்கு மூணு கல்யாணம்
த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி வதந்திகள் பரவுவது, கோலிவுட்டுக்குப் புதுசில்ல! குறிப்பா, வருஷத்துக்குக் குறைஞ்சது மூணு தடவையாவது அவருக்குக் கல்யாணம்னு சோஷியல் மீடியாக்கள்ல செய்தி வந்திடும்! அப்படித்தான், இப்போ மறுபடியும் ஒரு 'கல்யாண அவசரச் சட்டம்' போட்டிருக்காங்க ரசிகர்கள்!
சமீபத்திய வதந்திகளின்படி, த்ரிஷா இறுதியாகத் திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். என்னடா இது, கல்யாணமே பண்ணிக்க மாட்டாருன்னு பார்த்தா, திடீர்னு ஓ.கே சொல்லிட்டாரேன்னு எல்லாரும் ஆச்சரியத்துல இருக்காங்க!
சமூக வலைத்தளச் செய்திகளின்படி, த்ரிஷாவின் வருங்கால கணவர் பஞ்சாபில் உள்ள சண்டிகரைச் சேர்ந்தவராம். அவர் ஆஸ்திரேலியாவில் பெரிய பிசினஸ் எல்லாம் நடத்திட்டு, இப்போ இந்தியாவிலும் தொடங்கியிருக்கிறாராம். த்ரிஷாவின் குடும்பத்துக்கும், மாப்பிள்ளை குடும்பத்துக்கும் ரொம்ப நெருங்கிய உறவு இருக்குறதால, பெரியவங்க பேசி இந்தத் திருமணத்தை நிச்சயம் பண்ணி இருக்காங்களாம்!
இப்போ எல்லாருக்கும் ஒரே கேள்விதான்: "வருஷத்துக்கு மூணு முறை பரவும் வதந்தி லிஸ்ட்ல, இந்த பஞ்சாபி மாப்பிள்ளை வதந்தியும் சேருமா? அல்லது இந்த முறையாவது நிஜமாவே கல்யாணம் நடக்குமா?
காதல் டிராமா
அதுமட்டுமில்லாம, த்ரிஷான்னா, தளபதி விஜய் பற்றிய வதந்தி இல்லாம செய்தி முடியுமா? விஜய்யுடன் த்ரிஷாவுக்குப் பல வருஷங்களாகக் காதல்னு வந்த வதந்திகளுக்கு, கீர்த்தி சுரேஷின் திருமணத்துக்கு இருவரும் ரகசியமா போய் வந்தது, பொது இடங்கள்ல இருவரும் நெருக்கமா இருந்தது போன்ற சம்பவங்கள் வலு சேர்த்தன!
விஜய் விரைவில் தன் மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் செய்திகள் பரவின. இந்த அளவுக்குச் சர்ச்சைகள் வந்த பிறகுதான், த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில், "நல்ல நட்பைக்கூடத் தவறாகப் பார்ப்பவர்களின் பார்வையில் உள்ளதுதான் பிரச்சனை" என்று விஜய் பெயரைக் குறிப்பிடாமல், சூசகமா ஒரு விளக்கம் கொடுத்திருந்தார்.
மொத்தத்துல, 'குந்தவை' அரசியைத் திருமணம் செய்யப்போறது அந்தப் பஞ்சாபி மாப்பிள்ளையா? இல்லைன்னா, இந்தச் செய்தியும் 'அடுத்த கல்யாண வதந்தி' வரும் வரை நீடிக்குமான்னு தெரியல! த்ரிஷா இது பற்றி எப்போது விளக்கம் கொடுப்பார்னு ரசிகர்கள் காத்துக்கிட்டிருக்காங்க!
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!