இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
அமெரிக்கா - இஸ்ரேல்
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``இஸ்ரேலுக்கான ராணுவ ஆதரவை அமெரிக்கா நிறுத்த வேண்டும்.
சகோதரத்துவ நாடான லெபனான் மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
சியோனிச(யூத) நிறுவனத்திற்கு ராணுவ ஆதரவையும் மறைமுக அரசியல் ஆதரவை வழங்குவதையும் நிறுத்த வேண்டும்.
சுதந்திரம், சுயநிர்ணய உரிமை, ஜெருசலேமை தலைநகராக கொண்டு தங்கள் சுதந்திர பாலஸ்தீனிய அரசை நிறுவுதல் உள்ளிட்ட பாலஸ்தீனிய உரிமைகளை சமரசம் செய்யும் எந்த தீர்வுகளையும் இஸ்ரேல் ஏற்காது.
எங்கள் மக்களின் நியாயமான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். பாலஸ்தீன இறையாண்மை குறித்த எங்களின் நீண்டகால நிலைப்பாட்டிற்கும் பாலஸ்தீனர்கள் உரிமை கோரும் பிரதேசங்களில் இஸ்ரேலின் இருப்பை எதிர்ப்பதற்கும் உள்ள நியாயங்களை புரிந்துகொள்ளவேண்டும்.
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்
காஸா பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு போர் தொடர்பாக ஒரு வருடத்திற்கும் மேலாக அமெரிக்க பொதுமக்களால் எழுப்பப்பட்டுவரும் குரல்களைக் கேட்க வேண்டும்!" என ஹமாஸ் அமைப்பு டொனால்ட் ட்ரம்பின் புதிய நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருக்கிறது.
அதேசமயம், இதே ட்ரம்ப் தான் கடந்த 2017-ம் ஆண்டு முதல்முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றபோது, இஸ்ரேல் - பாலஸ்தீன மக்களுக்கு பொதுவாக இருந்த ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததோடு, அங்கு அமெரிக்க தூதரகத்தையும் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா - உக்ரைன் போர்: ட்ரம்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
இரண்டாண்டுகளுக்கும் மேலாக நீடித்துக்கொண்டிருக்கும் ரஷ்யா - உக்ரைன் போரைப் பொறுத்தவரையில் ஜோ பைடனின் தலைமையிலான அமெரிக்காவுக்காவின் நிலைப்பாட்டுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை, ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்கா எடுக்கும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
ஆதாவது, ஜோ பைடன் ரஷ்யாவுக்கு எதிராகவும் உக்ரைனை ஆதரித்து ஆயுத உதவிகள் வழங்கியும் வந்தார். ஆனால், டொனால்ட் ட்ரம்போ ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருக்கமான நீண்டகால நண்பர். 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு, ரஷ்ய அதிபர் புதின் மறைமுக உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டு அப்போது முதல் இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
அதேசமயம், அமெரிக்கா - ரஷ்யா பனிப்போர் என்ற வழமைக்கு மாறாக இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசிக்கொண்ட தருணங்களும் ட்ரம்பின் ஆட்சியில் நடந்தவை.
அதுமட்டுமல்லாமல், ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி அரசாங்கம் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதை எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் போரில் ட்ரம்ப் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுப்பார் என யூகிக்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். அதாவது, ரஷ்யாவுக்கு ஆதரவான ஒப்பந்தத்துடன் போர் நிறுத்தம் கொண்டுவருவார் ட்ரம்ப் என்கிறார்கள்.
ரஷ்யா -உக்ரைன் போர்!
ஏனெனில், ஏற்கெனவே ட்ரம்ப், `ரஷ்யா - உக்ரைன் போரை 24 மணிநேரத்தில் முடிவுக்கு கொண்டுவரலாம்.
அதற்கான வழிமுறை என்னிடம் இருக்கிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து, ஒரு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதே அமெரிக்காவுக்கு சிறந்த நலன் என்று நான் நினைக்கிறேன்' எனப் பலமுறை பேசியிருக்கிறார்.
இந்த நிலையில், அதற்கான முன்னெடுப்புகள் நடக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``அதிபர் ட்ரம்ப் தலைமையில் வலுவான அமெரிக்க சகாப்தத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம். வலிமையின் மூலம் அமைதியான அணுகுமறையை கையாளும் அதிபர் ட்ரம்பின் உறுதிபாடு பாராட்டத்தக்கது. கூட்டாண்மையைப் பற்றி விவாதிக்க ஆவலுடன் இருக்கிறோம்!" என்று டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
போர் நிறுத்தம் வருமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!