VIDEO: கடை தேடி வரும் மாட்டுக்கு தினந்தோறும் தோசை சுட்டு கொடுக்கும் உரிமையாளர்
உத்தரகாண்டில் நடைபெற்றதாக கூறப்படும் அந்த வீடியோவில் சாலையோர உணவகம் ஒன்றை தேடி மாடு ஒன்று வருகிறது.
அந்த கடையின் உரிமையாளர் அந்த மாட்டுக்கு தோசை ஊற்றுகிறார். இதை அந்த மாடு அமைதியாக பார்த்தவாறு தனது உணவுகாக காத்துக்கொண்டு இருக்கிறது. சிறிது நேரத்தில் கடை உரிமையாளர் 2 தோசைகளை சுட்டு எடுத்துக்கொண்டு அந்த மாட்டின் அருகே சென்று கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விடுகிறார். அந்த மாடு தோசைகளை அழகாக சாப்பிடுகிறது.
இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகி உள்ளது. இந்த கடையை தேடி நாள்தோறும் அந்த மாடு வருவதாக கூறப்படும் நிலையில், தினமும் தவறாமல் அந்த மாட்டுக்கு உணவளிக்கும் அந்த கடையின் உரிமையாளரை நெட்டிசன்கள் பாராட்டி பதிவிட்டனர்.
ஒரு பயனர், நந்தி மகாராஜாவுக்கு கடைக்காரர் உபசரிப்பு பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என பதிவிட்டிருந்தார்.
एक डोसा विक्रेता अपनी दुकान पर रोज आने वाली गाय के लिए प्यार से डोसा बनाता नजर आया ❤️🐄 pic.twitter.com/FkLhzlCSoi
— Kiran (@KiranChauhanIND) May 19, 2026

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!