news@ilakkiyainfo.com

பிரிவுகள்

VIDEO | அஜித்துடன் ஆரத்தழுவியது முதல் காரில் பயணித்தது வரை..! லண்டன் பந்தயக் கள வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்!...

15 Sep, 2026

லண்டன் சில்வர் ஸ்டோன் ரேசிங் கர்க்யூட்டில் நடிகர் அஜித்குமாரை சந்தித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் முதலமைச்சர் விஜய் பகிர்ந்துள்ளார்


அஜித் கார் பந்தயம் 

பிரிட்டன் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தய நிகழ்வில் பங்கேற்று திரைத்துறையின் முன்னணி நடிகரும் ரேசருமான அஜித்குமாரின் கார் பந்தயப் பிரிவை தொடங்கி வைத்தார். 

உலக அளவில் கவனம் ஈர்த்துள்ள இந்நிகழ்வில் இரு நட்சத்திரங்களும் நேரில் சந்தித்து பரஸ்பர நினைவு பரிசுகளைப் பரிமாறி கொண்டது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

லண்டன் பந்தயக் களத்தில் நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். பரிசுகள் பரிமாற்றம் இந்த சந்திப்பின்போது, முதலமைச்சர் விஜய் நடிகர் அஜித் குமாருக்கு சிறப்பு நினைவுப் பரிசாக ரேஸ் கார் மாதிரியை வழங்கி கவுரவித்தார். 

அதற்கு பதிலளிக்கும் விதமாகவும் தனது மரியாதையை வெளிப்படுத்தும் வகையிலும், நடிகர் அஜித் குமார் முதலமைச்சர் விஜய்க்கு பந்தய ஹெல்மெட்டை அன்பு பரிசாக வழங்கினார். 

வீடியோ வெளியிட்ட விஜய் லண்டன் சில்வர் ஸ்டோன் ரேசிங் கர்க்யூட்டில் நடிகர் அஜித்குமாரை சந்தித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் முதலமைச்சர் விஜய் பகிர்ந்துள்ளார். 

நடிகர் அஜித்குமார் பங்கேற்ற மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்திருந்தார். அந்த வீடியோவில், விஜயும்- அஜித்தும் ஆரத்தழுவியது முதல், சில்வர் ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் முதலமைச்சர் விஜயை அமரவைத்து நடிகர் அஜித்குமார் காரை ஓட்டியுள்ளது வரை இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை கண்டு, விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். p>



................................................................

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!