ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
war 2war 2
இந்நிலையில் கூலி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், வார் 2-க்கு அதிகப்படியான வரவேற்பு கிடைக்கவில்லை, படம் சுமார் என்ற தகவலும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட ரசிகர்களை கடந்து இந்தி ரசிகர்களிடமும், வட மாநிலத்திலும் கூலி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், டிக்கெட் முன்பதிவில் கூட தென்னிந்தியாவை விட வடஇந்தியாவில் கூலி படத்திற்கு அதிகம் புக் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படியான ஒரு சூழலில் வார் 2 படமும் பெரிய போட்டியாக இல்லாத நிலையில், கூலி திரைப்படம் 1000 கோடி வசூலை கடக்கும் நல்ல வாய்ப்பை இழந்துவிட்டதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலில் பெரியளவு வடமாநிலம் பங்காற்றிய நிலையில், கூலிக்கு அப்படியான சூழல் உருவாகியுள்ளது.
ஆனால் தென்னிந்தியாவில் கலவையான விமர்சனங்கள் பெற்றிருப்பது, படத்தை 1000 கோடி என்ற மைல்கல்லை கடப்பதற்கு தடையாக இருக்கும் என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கூலி திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!