news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அக்கரைப்பற்றில் காணாமல்போன நபரை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கோரப்படுகிறது

27 Oct, 2026

அக்கரைப்பற்றில் இருந்து தாயுடன் கல்முனைக்குச் சென்ற 44 வயதுடைய கோகுலராஜன் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அவரைக் கண்டுபிடிப்பதற்குப் பொதுமக்களிடம் அவசர உதவி கோரப்படுகிறது.

கடந்த 25ஆம் திகதி காலை 11.30 மணியளவில், தனது தாயுடன் அக்கரைப்பற்றில் இருந்து கல்முனைக்குப் பொருளொன்றை கொள்வனவு செய்வதற்காக இந்த நபர் சென்றுள்ளார். 

எனினும், குறித்த பொருள் கல்முனையில் கிடைக்காததால், அம்பாறைக்குச் சென்று அதனைக் கொள்வனவு செய்துவிட்டு வீடு திரும்புவதாகத் தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, NXG Splendor ரக மோட்டார் சைக்கிளில் (இலக்கம்: VM 4706) அம்பாறைக்குச் சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த நபரை கண்டுபிடிப்பதற்கான தேடல் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், அக்கரைப்பற்று, கல்முனை, அம்பாறை உள்ளிட்ட பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

குறிப்பாக, VM 4706 என்ற இலக்கத்தைக் கொண்ட NXG Splendor மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் கோகுலராஜனைக் கண்டவர்கள் அல்லது அவர் தொடர்பான ஏதேனும் தகவல்களை அறிந்தவர்கள், 075 581 8537 என்ற தொலைபேசி இலக்கத்துடன் உடனடியாகத் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும், இந்தச் செய்தியைத் தங்களது சமூக வலைத்தளங்கள், WhatsApp குழுக்கள் மற்றும் ஏனைய தொடர்பாடல் தளங்களில் பரவலாகப் பகிர்ந்து, காணாமல்போனவரைக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!