news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அக்குறணை விபத்தில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

19 Oct, 2026
அக்குறணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – கொழும்பு A9 வீதியில் அக்குறணை 7ஆம் மைல்கல் பகுதியில், இன்று முற்பகல் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற குறித்த விபத்தில், சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் 5 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீமெந்து கலவையுடன் பயணிக்கும், பல்கர் லொறி ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் பயணித்த வாகனங்கள் சிலவற்றுடன் மோதி, வீதியில் புரண்டு வீழ்ந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கண்டி மற்றம் அக்குறணை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அக்குறணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


அக்குரணையில்-கோர-விபத்து-10-வாகனங்கள்-மோதி-4-பேர்-பலி


அக்குரணை, குருகொடை சந்தி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துடன் தொடர்புடைய, சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி அலவத்துவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை - கண்டி பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை (19) முற்பகல் இடம்பெற்ற விபத்தின் பின்னர், லொறியின் சாரதி அலவத்துவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்விபத்தில் 6 பேர் உயிரிழந்ததோடு, மேலும் காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக அக்குரணை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லொறி சாரதி, தன் கட்டுப்பாட்டை இழந்தமையினால், வீதியில் பயணித்த பல வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்தின்போது சுமார் 8 வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதோடு,  இச்சம்பவம் தொடர்பில் அலவத்துவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு  வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!