news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை!

23 May, 2026

சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரரை, கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கம்பஹா பிரிவுப் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த தேரர், அநுராதபுரம் தலைமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள பிணை நிபந்தனைகள் வருமாறு:

  • தலா 05 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள்.

  • 100,000 ரூபாய் ரொக்கப் பிணை.

  • வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு உடனடித் தடை விதிப்பு.

பிணை நிபந்தனைகளை மீறினாலோ அல்லது இந்த வழக்கின் சாட்சியாளர்களுக்கு ஏதேனும் ஒரு வழியில் செல்வாக்கு செலுத்த முயன்றாலோ, பிணை உத்தரவு உடனடியாக இரத்து செய்யப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என நீதவான் தேரருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!