news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அதிதீவிர எச்சரிக்கை: 150 மி.மீ வரை கொட்டித் தீர்க்கப்போகும் மழை.

15 May, 2026

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (15.05.2026) அறிவித்துள்ளது. இந்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் தாக்கம் காரணமாக இன்று மிக பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மழைப்பொழிவு விபரங்கள்:

  • 150 மி.மீ மிக பலத்த மழை: மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது.

  • 100 மி.மீ பலத்த மழை: காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்யக்கூடும்.

  • ஏனைய பகுதிகள்: மத்திய மற்றும் வட மாகாணங்களிலும், அனுராதபுரத்திலும் அவ்வப்போது மழை பெய்யும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!